For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் குழந்தைகளுக்கு வாடகைக்கு ‘தாய்ப்பால்’...ஆன்லைனில் விளம்பரம்!

Google Oneindia Tamil News

பாரிஸ்: ஓரினச்சேர்க்கையாளர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு வாடகைக்கு தாய்ப்பால் ஊட்டத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து பரபரப்பைக் கூட்டியுள்ளார் இளம் தாய் ஒருவர்.

உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து வரும் நிலையில், அவ்வாறு திருமணம் செய்து கொண்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் வம்சத்தை பெருக்க வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஓரினச்சேர்க்கையாளர் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதோஅல்லது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குழந்தைப் பிறப்பிற்கான இனப்பெருக்கத்திற்கு உதவி செய்வதோ அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளம் தாய் ஒருவர் அத்தகைய ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைக்கு பாலூட்டத் தயாராக இருப்பதாக் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளாம்பரத்தில், ‘தான் ஒரு ஆரோக்கியமான 29 வயதான இளம்தாய் என்றும், நர்சாக பணிபுரிபவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள அப்பெண், ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தான் பாலூட்ட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாளொன்றிற்கு அதற்கு வாடகை 130 அமெரிக்க டாலர் எனவும் அறிவித்துள்ளார். இத்தகைய விளாம்பரத்தை அனுமதித்த இணைய முக்கிய நிர்வாகியான அலெக்ஸாண்டர் வூக்கிடம் இது பற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் ‘அந்தப் பெண் தனது அடையாளத்தையும், செய்யப்போகும் செயலின் தீவிரத்தையும் குறித்து தெளிவாக உள்ளார் என்றும், அவரது சேவை குறித்து சட்டபூர்வமாக எந்த சந்தேகமும் இல்லை என்பதனையும் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.

தனது பரபரப்பு விளாம்பரத்திற்கு கிடைத்த வரவேற்புப் பற்றி அப்பெண் கூறியுள்ளதாவது, ‘பிரான்சில் தாய்ப்பாலை விற்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால், சேவை எண்ணத்துடன் அதனை செய்ய வருவதால் இதில் எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை.இதுவரை தனக்கு பனிரெண்டுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன அவற்றில் பாதி மட்டுமே இது குறித்து தீவிரமாக இருந்தன. மற்றவை வக்கிர புத்தியுடையதாக இருந்தது என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

English summary
It wasn't an ad the website had expected to see posted: a 29-year-old nurse offering to breastfeed a baby, for €100 a day. But they checked her out and the ad was legitimate: the woman, obviously the mother of a young baby herself, had identified a gap in the market for male gay couples who have fathered children by adoption or via a surrogate, and are looking for a healthier alternative to bottlefeeding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X