For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவிட்சர்லாந்துக் கடையில் ஓபரா வின்பிரேவுக்கு அவமானம்.. மன்னிப்பு கேட்டது சுவிட்சர்லாந்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜூரிச்: சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரபல அமெரிக்க சாட் ஷோ கலைஞர் ஓபரா வின்பிரே, தன்னை அங்குள்ள வர்த்தக நிறுவனம், இனவெறி பாகுபாட்டுடன் பார்த்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து வின்பிரேவிடம் சுவிட்சர்லாந்து அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

விலை உயர்ந்த கைப்பை ஒன்றைக் காட்டுமாறு தான் கோரியபோது அதற்கு அந்த நிறுவனத்தினர் மறுத்ததாக புகார் கூறியுள்ளார் வின்பிரே.

இந்த செயல் இனவெறி பாரபட்சம் என்றும் அவர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.

உலகின் பணக்காரப் பெண்

உலகின் பணக்காரப் பெண்

உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்களில் ஒருவர் வின்பிரே.

போர்ப்ஸ் பட்டியலில்

போர்ப்ஸ் பட்டியலில்

59 வயதாகும் வின்பிரே, கடந்த மாதம்தான் உலகின் மிக சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் போர்ப்ஸ் இதழால் அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஜூரிச்சில் அவமானம்

ஜூரிச்சில் அவமானம்

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்குப் போயிருந்தபோது கடந்த ஜூலை மாதம் அங்குள்ள மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தில் ஷாப்பிங் மேற்கொண்டார் வின்பிரே.

கைப்பையைக் காட்ட மறுத்தனர்

கைப்பையைக் காட்ட மறுத்தனர்

அங்குள்ள விலை உயர்ந்த கைப்பையைப் பார்த்த வின்பிரே அதைக் காட்டுமாறு கூறியபோது கடை ஊழியர் மறுத்துள்ளார்.

அதெல்லாம் உங்களால் முடியாது

அதெல்லாம் உங்களால் முடியாது

இதுகுறித்து வின்பிரே கூறுகையில், நான் அந்தப் பையைப் பார்க்க கேட்டபோது, அதெல்லாம் உங்களால் வாங்க முடியாது. காஸ்ட்லியானது என்று கூறி சாதாரண ஒரு பையை எடுத்துக் காட்டினார். இது இனவெறிச் செயலாகும் என்றார்.

நிறுவனம் மறுப்பு

நிறுவனம் மறுப்பு

ஆனால் வின்பிரேவின் இந்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனமான ட்ரூடி கோயட்ஸ் மறுத்துள்ளது.

38,000 டாலர்தான்

38,000 டாலர்தான்

இத்தனைக்கும் வின்பிரே கேட்ட கைப்பையின் விலை 38,000 அமெரிக்க டாலர்தான். வின்பிரேவின் சொத்து மதிப்பு 2.8 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட சுவிட்சர்லாந்து

மன்னிப்பு கேட்ட சுவிட்சர்லாந்து

இந்த நிலையில் சர்ச்சைக்கு முடிவு கட்டும்வகையில் ஏற்பட்ட அசவுகரியத்திற்காக தாங்கள் மன்னிப்பு கேட்பதாக சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

English summary
A Swiss luxury boutique denied any wrongdoing on Friday after US chat show queen Oprah Winfrey claimed she had been the subject of racism when a shop assistant allegedly refused to show her an expensive handbag. Winfrey, one of the richest women in the world, said she had been in Zurich for US singer Tina Turner's wedding in July and had spotted a swanky crocodile handbag while out shopping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X