For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினம்: ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை தற்காலிக நிறுத்தம்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்போன் சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இன்று அதிகாலையிலேயே செல்போன் சிக்னல்களை ஆஃப் செய்துவிட்டனர். முன்பு ஒரு முறை சுதந்திர தினத்தன்று கொரில்லாக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் விவிஐபிக்களை தாக்க ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை பயன்படுத்தினர்.

இது போன்ற குண்டுகள் செல்போன் சிக்னல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்படுகிறது. அதனால் தான் இன்று சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. மாநிலத்தில் கொடியேற்றம் மற்றும் அணிவகுப்புகள் முடிந்த பிறகு செல்போன் சேவை மீண்டும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்டர்நெட் சேவை பிராட்பேண்டில் அதுவும் (ஸ்லோவாக) மெதுவாக வழங்கப்படுகிறது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் இணையதளத்தில் படங்களை அப்லோட் செய்யாமல் இருக்கத் தான் இன்டர்நெட் சேவை மெதுவாக வழங்கப்படுகிறது.

English summary
Mobile telephone services were on Thursday suspended all over Jammu and Kashmir as a precaution on Independence Day. Service providers turned off their mobile signals in Jammu region early in the day on the direction of the authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X