For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழுமலையான் தரிசிக்க செல்போன் கொண்டு போகாதீங்க... அரெஸ்ட் பண்ணிடுவாங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Tirumala
திருமலை: திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு செல்லும் வரிசைகளில் செல்போன் வைத்திருக்கும் பக்தர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்குகு செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா மற்றும் தேங்காய் கொண்டு செல்லக்கூடாது என்பது தேவஸ்தானம் கடைபிடித்து வரும் விதி.

ஆனால் திருமலையில் ரூ.300 விரைவு தரிசன வரிசையும், ரூ.50 சுதர்சன தரிசன வரிசையும் அருகருகே அமைந்துள்ளதால் வரிசையில் உள்ளவர்கள் மேலே ஏறி குதித்து வரிசையை மாற்றிக்கொண்டு செல்கின்றனர்.

இதையடுத்து முன்னாள் தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் இதற்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தரிசனத்துக்கு செல்போன்களுடன் வந்தால் அவர்களைக் கைது செய்ய வகை செய்யும் அரசாணையை ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இனி கையில் செல்போன்களுடன் வரிசைக்குள் நுழைந்தாலோ அல்லது வரிசையை மாற்றி ஏறி குதித்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவர் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

English summary
TTD head has warned that if anybody found with mobile phones while entering into the Tirumala temple they will be arrested .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X