For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈமு கோழிப் பண்ணையாளர்களின் சொத்துக்கள் முடக்கம்: அரசு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஈமு கோழிப் பண்ணையாளர்களின் சொத்துக்களை முடக்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

மக்களிடமிருந்து வசூலித்த டெபாசிட் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறிய ஈமு பண்ணையாளர்களின் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான உத்தரவை மாநில அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

தொடர் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சொத்து முடக்கம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்படும் சொத்துக்களை ஏலம் விட்டு அதிலிருந்து வரும் பணத்தை டெபாசிட் செய்த மக்களுக்குத் திரு்ப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுதி ஈமு பண்ணைகளின் சொத்துக்கள் இதுபோல முடக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்திடம் 220 ஈமு கோழிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 6.60 லட்சமாகும் இந்த கோழிகள் அனைத்தும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல சுபஸ்ரீ ஈமு பண்ணைகள், ஜிஒன் ஈமு ஜோன் இந்தியா லிமிட்டெட் ஆகியவற்றின் வாகனங்கள், அசையா சொத்துக்கள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுவலக பர்னிச்சர்கள் ஆகியவையும முடக்கப்பட்டுள்ளன.

English summary
The State government has attached properties of many emu farms that had defaulted on repayment of public deposits. A number of government orders have been issued to this effect by the Home Department. An important step in a long winding legal process under which the assets would be liquidated to repay the deposits, the State government's move is likely to keep the hopes of depositors alive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X