வெடிச்ச வெடிக்குப் பயந்து கொடிக்கம்பத்துக்கு அடியில் பதுங்கிய 'சின்ன கேப்டன்'!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேமுதிகவினர் போட்ட வெடியால் ஊரே ரெண்டு பட்டுப் போய் விட்டது. அவர்கள் போட்ட வெடியால் அந்தக் கட்சியினரே பயந்து போகும் அளவுக்கு செம சத்தம்.. .ஒரு தொண்டர் கொடிக் கம்பத்துக்குக் கீழே போய் பம்மி உட்கார்ந்து பயந்து போகும் அளவுக்கு வெடித்து விட்டனர் தேமுதிகவினர்.

ரோட்டில் பட்டாசு போடுவது, ரோட்டை அடைத்து ஊர்வலம் போவது, தட்டிக் கேட்போரை பல்லை உடைத்துக் கையில் கொடுப்பது, வண்டியை போட்டு உடைப்பது... இதெல்லாம் தமிழக கட்சிகளின் பாரம்பரியம்..

இதில் ஒரு குறைவும் இல்லாமல் நடந்து கொள்பவர்கள் அதிமுக, திமுக, பாமக போன்ற கட்சியினர்தான். ஆனால் முதல் முறையாக பொதுமக்கள் டென்ஷனாகி, கோபித்துக் கொந்தளிக்கும் வகையில் அடாவடியாக நடந்துள்ளனர் தேமுதிகவினர்.

புதுக்கோட்டையில்தான் இந்த அக்கப்போர். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக சமீபத்தில் ராமசாமி என்பவரை அக்கட்சித் தலைமை நியமித்தது. இதில் செம காமெடி என்னவென்றால், தேமுதிக அறிவித்த ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது தொண்டர்கள் எல்லாம் வாலண்டியராக வலியக்கப் போய் கைதானார்கள். ஆனால் இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி மட்டும் நைசாக எஸ்கேப் ஆகி விட்டார். அவருக்குத்தான் மா.செ. என்ற பொறுப்பைத் தூக்கிக் கொடுத்துள்ளது கட்சித் தலைமை.

அடடா.. பதவி வந்து விட்டதே என்ற பவுசில் ராமசாமியின் ஆட்கள் புதுக்கோட்டையில் பட்டாசு போட்டு பட்டையைக் கிளப்பி விட்டனர்.

ஊரெல்லாம் உன் பாட்டுதான் என்பது போல புதுக்கோட்டையே நடுங்கிப் போகும் அளவுக்கு பட்டாசு போட்டு ரோட்டை நாஸ்தியாக்கினர். அரசு மருத்துவமனை வழியாக ஊர்வலமாக வந்த அவர்கள் மருத்துவமனை முன்பே சரவெடிகளை சரமாரியாக வெடித்ததால் நோயாளிகள் பீதியடைய நேரிட்டது.

அப்படியே ஒவ்வொரு தலைவர் சிலையாக மாலை போட்டு வந்த அவர்கள் வழியில்வந்த அரசுப் பேருந்துகளை நிறுத்தி நாங்கதான் வர்றோம்ல.. நீ பாட்டுக்கு வர்றே என்று கூறி டிரைவர்களை ஏக வசனத்தில் கடிந்து கொண்டனர். இதனால் எந்த பஸ்சும் போக முடியவில்லை.

இந்த நிலையில் ஒரு தொண்டர், தனது கட்சியினர் போட்ட பட்டாசுச் சத்தத்திற்குப் பயந்து போய் கொடிக் கம்பத்திற்குக் கீழே போய் பம்மி உட்கார்ந்தார்.

புதுக்கோட்டை போலீஸார் இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை. கூடவே வழக்கையும் போட்டு வைத்துள்ளனர். அடுத்து ஆர்டர் வந்ததும் உள்ளே பிடித்துப் போடுவார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+