For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியை புகழ்ந்த அமிதாப்: யூ டியூப்பில் போலி வீடியோவால் பரபரப்பு!

By Siva
Google Oneindia Tamil News

Fake video showing Amitabh Bachchan promoting Narendra Modi
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய வீடியோ யூ டியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது போலி வீடியோ என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 2007ம் ஆண்டு லீட் இந்தியா என்ற பிரச்சாரத்தை டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக செய்தார். அந்த வீடியோவில் அவர் நாட்டைப் பற்றி பெருமையாக பேசியிருப்பார். இந்நிலையில் யூ டியூப்பில் அமிதாப் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக ஆக்க ஆதரவு தெரிவித்து பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் மோடி தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ போலியானது என்று அமிதாப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, போலி, போலி, போலி!! இந்த சட்டவிரோத செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்... இதை பார்த்து கண்டனம் தெரிவியுங்கள்.

பொய்யான வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்... 2007ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக நான் லீட் இந்தியா பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் நம் நாட்டைப் பற்றி பெருமையாக பேசியிருந்தேன். அதை வைத்து யாரோ பொய்யான வீடியோவை தயாரித்து என் குரல் போன்று பேசி லீட் இந்தியா வீடியோவில் இருந்ததற்கு மாறாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நான் புகழ்வது போன்று பேசியுள்ளனர். இந்த வீடியோவை உருவாக்கி யூ டியூப்பில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

போலியான வீடியோ என்று அமிதாப் தெரிவித்துள்ள ட்வீட்கள் நூற்றுக்கணக்கானோரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. மேலும் யூ டியூப்பில் உள்ள அந்த வீடியோவை நீக்குமாறு அமிதாபின் ரசகிரகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அமிதாப் பச்சன் சொல்வதை ஏற்கிறேன். இந்த போலி வீடியோவை வெளியிட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த நபர் அமிதாப் ஜியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
A fake video showing Bollywood star Amitabh Bachchan praising Gujarat CM Narendra Modi as the only hope of India goes viral. Amitabh is angered by this and approached the authorities to take action against the person who uploaded the video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X