For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"டெங்கு கொசுவைக் கொல்ல மம்பட்டியோடு போங்க.."

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கையோடு கடப்பாரை, மண்வெட்டி, உளி, சுத்தியல் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

எதற்காக என்றால், விழிப்புணர்வுக்காக போகும் இடத்தில் தண்ணீர்த் தொட்டிகளில் தேங்கிக் கிடக்கும் நீரை வெளியேற்ற இவர்களே வழி செய்ய வேண்டும் என்பதற்காகவும்.

ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்துவதில் பல சிக்கல்களை சந்திக்கிறார்களாம் ஊழியர்கள்.

ஏடிஸ் எஜிப்தி...

ஏடிஸ் எஜிப்தி...

டெங்குவைப் பரப்பும் கொசுவுக்கு ஏடிஸ் எஜிப்தி என்று பெயர். இந்தக் கொசுவை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கூடுதல் பணியாளர்கள் நியமனம்

கூடுதல் பணியாளர்கள் நியமனம்

இந்தக் கொசுக்களை ஒழிக்கும் பணிக்காக, சுகாதார ஆய்வாளர்களுடன், மஸ்தூர் பணியாளர்களையும் அரசு கூடுதலாக நியமித்துள்ளது.

கொசுவை ஒழிக்கப் போகும்போது...

கொசுவை ஒழிக்கப் போகும்போது...

இந்தப் பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை பல்வேறு யோசனைகளையும் தெரிவித்துள்ளது. அதாவது கொசு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்திற்குப் போகும்போது கையோடு கொண்டு போக வேண்டியவை குறித்த உத்தரவுதான் அது.

மண்வெட்டி - கடப்பாரை- சுத்தியல்

மண்வெட்டி - கடப்பாரை- சுத்தியல்

அதாவது, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும்போது சுகாதார துறை ஆய்வாளர்களுடன் செல்லும் மஸ்தூர் பணியாளர்கள் டெமிபாஸ் மருந்து, விழிப்புணர்வு நோட்டீஸ் ஆகியவற்றுடன் கடப்பாரை, உளி, சிறிய சுத்தியல், மண்வெட்டி ஆகியவற்றையும் எடுத்து செல்ல வேண்டும்.

நீங்களே வெட்டி விடுங்க

நீங்களே வெட்டி விடுங்க

தண்ணீர் வெளியேற வழி இல்லாத தொட்டிகளின் கீழ்பகுதியில் மஸ்தூர் தொழிலாளர்களே கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் உதவியுடன் துளை அமைக்க வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடப்பாரை கொள்முதல்

கடப்பாரை கொள்முதல்

மேலும் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன.

அண்டா குண்டாவில்தான் தண்ணீர்

அண்டா குண்டாவில்தான் தண்ணீர்

ஆனால் மஸ்தூர் பணியாளர்கள் வேறு மாதிரியாக புலம்புகிறார்கள். அவர்கள் கூறுகையில்,கிராமப்பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதே அரிது. இதனால் அவர்கள் கிடைக்கும் தண்ணீரை அதிக அளவில் தொட்டி மற்றும் பாத்திரங்களில் சேமித்து வைக்கின்றனர்.

அந்தா பாருங்க முட்டை..

அந்தா பாருங்க முட்டை..

அவற்றை ஆய்வு செய்யும்போது அந்த பாத்திரங்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்களின் முட்டைகள் அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுகிறோம். அந்த தண்ணீரை உபயோகிக்க வேண்டாம்; கீழே கொட்டி விடுங்கள் என்று கூறினால் எங்களுடன் சண்டைக்கு வருகின்றனர்.

மருந்து தெளிக்க நோ பெர்மிஷன்

மருந்து தெளிக்க நோ பெர்மிஷன்

பல வீடுகளில் தொட்டிகளில் டெமிபாஸ் மருந்து தெளிக்கவே அனுமதிப்பது இல்லை.

திருடன் மாதிரி பாக்குறாங்க பாஸ்..

திருடன் மாதிரி பாக்குறாங்க பாஸ்..

இந்நிலையில் கடப்பாரை, சுத்தியலுடன் வீட்டு கதவை தட்டும் எங்களை ஏதோ பகல் கொள்ளையன் என கருதி சில இடங்களில் கதவை திறக்கவே மறுக்கின்றனர்.

திட்றாங்களே...

திட்றாங்களே...

சில இடங்களில் எங்களை திட்டி அனுப்புகின்றனர். மேலும், டெங்கு கொசு ஒழிக்க பயிற்சி எடுத்த எங்களை கொத்தனார் போல கட்டிட வேலை செய்ய சொல்வது சரியில்லை என்று குமுறுகின்றனர்.
எக்ஸ்ட்ரா தகவல்

English summary
Dengue mosquito eradication workers are face the ire of villagers in a novel way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X