For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்கார சாமியார் அசாராம் பாபுவை பாஜகவினர் யாரும் ஆதரிக்கக் கூடாது: மோடி 'கட்டளை'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியிருக்கும் சாமியார் அசாராம் பாபுவை யாரும் ஆதரிக்கக் கூடாது என்று பாஜகவினருக்கு அக்கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் நரேந்திர மோடி கட்டளை பிறப்பித்துள்ளார்.

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியிருக்கிறார் சர்ச்சைக்குரிய சாமியார் அசாரம் பாபு. அவரோ தாம் நிரபராதி.. தம் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் ரூ5 லட்சம் பரிசு தருகிறேன் என்றெல்லாம் ரீல் விட்டு வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிய குஜராத் முதல்வரும் பாஜக பிரசார குழுத் தலைவருமான நரேந்திர மோடி, அசாராம் பாபு விவகாரத்தில் அவரை பாஜகவினர் ஆதரிக்கக் கூடாது. தம் மீதான குற்றச்சாட்டுகளை அசாராம்பாபுவே எதிர்கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறார்.

Don't defend rape-accused Asaram. Modi's angry diktat to party leaders

முன்னதாக பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, அசாராம் பாபுவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி, பிரபாத் ஜாவும் அசாராம் பாபுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarat Chief Minister Narendra Modi is not happy about how some BJP leaders have jumped in to defend self-proclaimed godman Asaram Bapu, accused of sexually assaulting a 16-year-old girl. Modi, also head of the BJP campaign committee, spoke to party president Rajnath Singh on Tuesday evening and asked him to ensure that no spokesperson or leader is seen or heard defending Asaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X