For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 மொழிகளில் ட்விட் செய்யும் நரேந்திர மோடி... மாநில மக்களுடன் மொழிகளால் இணைகிறார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 15 மொழிகளில் தனது கருத்துக்களை தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மொழியால் அனைத்து மாநில மக்களுடன் தன்னுடயை கருத்துக்களை எளிதாக பதிவு செய்கிறார்.

சமீபத்தில் உடல்நலம் குன்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு நரேந்திர மோடி ட்விட்டர் இணைய தளத்தில் அவர் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த தகவலை அவர் ஆங்கிலம் குஜராத்தி மொழிகளில் மட்டுமல்லாது உருது, இந்தி, வங்காளி உள்பட 15 மொழிகளில் வெளியிட்டு இருந்தார்.

50 மொழிகளில்

50 மொழிகளில்

இது தவிர அவரது பிளாக்கில் 50 மொழிகளில் பதில் அளிக்குமாறு தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் பணிகள் நடந்து வருகிறது. அதன் மூலம் அந்தந்த மாநில மொழிகளில் பதில் அளிக்க நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

மாநில மக்களுடன் பேச

மாநில மக்களுடன் பேச

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநில மக்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக இந்த ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சரளமான பேச்சு

சரளமான பேச்சு

அவருக்கு ஏற்கனவே குஜராத்தி, இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச முடியும். பொதுக்கூட்டங்களில் அந்தந்த மாநில மொழிகளில் பேசி மக்களை கவர்கிறார்.

தெலுங்கு, ஒரியா

தெலுங்கு, ஒரியா

கடந்த 11ம்தேதி ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி தெலுங்கில் பேசினார். இதே போல் ஒடிசா மாநிலம் பூரியில் நடந்த கூட்டத்தில் ஒரியா மொழியில் பேசினார்.

English summary
Gujarat chief minister Narendra Modi has been tweeting in 15 languages including Urdu apart from English and Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X