For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி பண்டிகை… ரயில் டிக்கெட் 15 நிமிடங்களில் முடிந்தது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கான ரயில் டிக்கெட், முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் விற்று தீர்ந்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

Train

அக்டோபர் 30 ஆம் தேதி ரயில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் தங்களது பயண முன்பதிவை இன்று காலை 8 மணி முதல் ரயில்வே முன்பதிவு மையங்களிலும், இன்டர்நெட் மூலமும் பதிவு செய்ய தொடங்கினர்.

டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இதனால் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

ரயில் பயணத்திற்கான முன்பதிவை 120 நாட்களுக்கு முன் பயணிகள் செய்து வந்தனர். இந்நிலையில், போலி பயணிகளும், ஏஜெண்டுகளும் மொத்தமாக பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்துவிடுவதால், உண்மையாக பயணம் செய்ய இருப்பவர்களுக்கு ரயில்களில் முன்பதிவு கிடைப்பதில்லை. இதை தவிர்க்கும் விதமாக ரயில் பயணத்திற்கான் முன்பதிவு நாட்களை 120-ல் இருந்து 60 நாட்களாக ரயில்வே நிர்வாகம் குறைத்தது.

இதனால் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர். பண்டிகைக்கு முன்னதாக சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Travelling home for Diwali holidays is going to be tough for those who have not already made their plans. Berths in three of the five special trains announced for the festival from Chennai were sold out just a few minutes after bookings opened on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X