For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது என்ன ஆண்மைப் பரிசோதனை?.. எப்படிப் பண்ணுவாங்க??

Google Oneindia Tamil News

சென்னை: பாலியல் பலாத்காரம், பாலியல் சில்மிஷம் போன்ற வழக்குகளில் சிக்கும் ஆண்களுக்கு முதலில் ஆண்மைப் பரிசோதனை செய்வார்கள் காவல்துறையினர்.

இந்தப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்துத்தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பலமாக இருக்குமா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.

இதற்கு முன்பு இப்படிப்பட்ட வழக்குகளில் சிக்கிய பிரபலங்கள் பலருக்கும் இந்த சோதனையை காவல்துறையினர் செய்துள்ளனர். ஏன்.. நித்தியானந்தாவுக்கும் கூட ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இப்படித்தான் தற்போது 16 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் அஸரம் பாபுவுக்கும் ஆண்மைப் பரிசோதனை செய்து அவர் நல்ல ஆண்மையுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்மைப் பரிசோதனை என்றால் என்ன.. என்ன செய்வார்கள் என்பதைப் பார்ப்போமா...

ஆண்மைதான் முக்கியம்...

ஆண்மைதான் முக்கியம்...

பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்குவோர் தாங்கள் தப்பிக்க தங்களுக்கு ஆண்மை இல்லை, அந்த அளவுக்கு தங்களிடம் தெம்பு இல்லை என்ற வாதத்தை நீதிமன்றங்களில் முன்வைக்கக் கூடும் என்பதால், முதலில் இந்த ஆண்மைப் பரிசோதனையை காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டோருக்கு நடத்துகிறார்கள்.

போலீஸுக்கு உரிமை உண்டு

போலீஸுக்கு உரிமை உண்டு

பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்குவோரிடம் ஆண்மைப் பரிசோதனை நடத்த காவல்துறையினருக்கு உரிமை தரப்பட்டுள்ளது. இதை வைத்துத்தான் காவல்துறையினர் தங்களது தரப்பு வாதத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

யூரோ- ஆண்ட்ராலஜிஸ்ட்

யூரோ- ஆண்ட்ராலஜிஸ்ட்

இந்த சோதனையை நடத்துவது யூரோ - ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்கள்தான். அதாவது சிறுநீரகவியல் மற்றும் ஆண்மைக் குறைபாடு நிபுணர்கள்.

மொத்தம 3 டெஸ்ட்

மொத்தம 3 டெஸ்ட்

மொத்தம் 3 விதமான சோதனைகள் இதில் நடத்தப்படும். முதலில் செமன் அனாலிசிஸ்... அதாவது விந்தனு ஆய்வு. விந்தனு எண்ணிக்கை, வீரியம் எந்த அளவு உள்ளது என்பது ஆராயப்படும். இரண்டாவது, ஆண்குறி ஸ்கேன். ஆண் குறி எழுச்சியுடன் உள்ளதா என்பதை அறிய டாப்ளர் ஸ்கேன் மூலம் ஆய்வு செய்வார்கள். கடைசியாக விஷூவல் எக்ஸாமினேஷன். அதாவது ஆண் குறி எழுச்சி பெற்ற நிலையில் எப்படி உள்ளது, சாதாரண நிலையில் எப்படி உள்ளது என்பது ஆராய்வது.

எழுச்சி இருக்கா, இல்லையா

எழுச்சி இருக்கா, இல்லையா

விஷூவல் எக்ஸாமினேஷனின்போது ஆண்குறி எழுச்சி நிலையில் எப்படி இருக்கிறது, சாதாரண நிலையில் எப்படி இருக்கிறது என்பதை டாக்டர்கள் கண்டறிவார்கள். இதன் மூலம் ஆண்குறியானது வழக்கமான எழுச்சி நிலையில் உள்ளதா அல்லது அதில் குறைபாடு உள்ளதா என்பதை அறிய முடியும்.

முடியுமா.. முடியாதா

முடியுமா.. முடியாதா

அத்தனை பரிசோதனைகளும் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா, அதற்கான தகுதியுடன் அந்த நபர் உள்ளாரா, விந்தனு கணக்கு இயல்பு நிலையில் இருக்கிறதா என்ற முடிவுக்கு டாக்டர்கள் வருவார்கள்.

ஒரு சின்னச் சிக்கல்...

ஒரு சின்னச் சிக்கல்...

ஆண்மைப் பரிசோதனையின்போது முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இயல்பான முறையில் எழுச்சியை வரவைத்து சோதனை செய்தால்தான் காவல்துறைக்கு நல்லது. அப்படி இல்லாமல், இதற்காகவே உள்ள மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி பின்னர் எழுச்சி வர வைத்து சோதனை செய்தால் அது குற்றவாளிக்கு சாதகமாகப் போய் விடும். காரணம், எனக்கு இயல்பான முறையில் எழுச்சி வராது, அப்படி இருக்கையில், நான் எப்படி கற்பழித்திருக்க முடியும் என்று அவர் வாதிட முடியுமே...

டாக்டரும் சாட்சி சொல்லனும்...

டாக்டரும் சாட்சி சொல்லனும்...

மருந்து கொடுத்து எழுச்சியை ஏற்படுத்தி சோதனை செய்யும்போது, அந்த சோதனையைச் செய்த டாக்டரும் வழக்கில் ஒரு சாட்சியமாக சேர்க்கப்படுவார்.

ஒருவேளை சோதனைக்கு சம்மதிக்காவிட்டால்...

ஒருவேளை சோதனைக்கு சம்மதிக்காவிட்டால்...

ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்ட நபர் சோதனை செய்து கொள்ள முன்வராவிட்டால், மறுப்பு தெரிவித்தால், அதுதொடர்பான டாக்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

அரசுத் தரப்பு சாட்சி கிடையாது

அரசுத் தரப்பு சாட்சி கிடையாது

இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அரசு் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட மாட்டார்கள். மாறாக நடுநிலையான சாட்சியாக அவர்கள் கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The arrest of spiritual guru Asaram Bapu for allegedly assaulting a minor girl and the resultant potency test on him, which he cleared, has brought this procedure into the limelight. So what is a potency test, and how is it conducted?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X