For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தான் தாலிபன்களால் சுட்டுக் கொலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Indian diarist Sushmita Banerjee shot dead in Afghanistan
காபூல்: இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பானர்ஜி 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் 'Escape From Taliban' எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது.

இதனால், சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். ஆப்கானிஸ்தானில் தனது அனுபவங்கள் குறித்து அவுட்லுக் சஞ்சிகைக்கு எழுதி வந்தார்.

1994ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் சிக்கிய அவர் வீட்டுச்சிறையில் இருந்த போது மண் சுவரை குடைந்து வெளியே தப்பியோடிய போதும், காபுலுக்கு அருகில் வந்த போது 15 பேர் கொண்ட தலிபான்களின் பிடியில் மீண்டும் சிக்கிக் கொண்டார். எனினும் தான் இந்தியன் என்றவகையில் தனது நாட்டுக்கு போக உள்ள உரிமை குறித்து அவர்களிடம் எடுத்துக் கூறி அவர்கள் மனதை மாற்றி அங்கிருந்து தப்பியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் அவர் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தானின் கரானாவுக்கு சென்றார். பாகிட்கா எனும் இடத்தில் சுகாதாத் துறை அதிகாரியாக சயீத் கமலா என்ற பெயரில் மருத்துவப்பணியாளராக வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள் அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு விட்டு இவரைச் சுட்டுக் கொண்டதுடன் பானர்ஜியின் உடலை அருகேயிருந்த மதப் பள்ளிக்கூடத்தில் திணித்து வைத்துவிட்டு சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

English summary
An Indian woman author who wrote a popular memoir about her escape from the Taliban has been shot dead in Afghanistan's Paktika province by suspected militants, BBC reported citing police Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X