For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் தூதர் ரொமேஷ் பண்டாரி மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் தூதரும், முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளருமான ரொமேஷ் பண்டாரி மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

பல்வேறு மாநிலங்களில் ஆளுநராகவும் இவர் இருந்துள்ளார். டெல்லியில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் மரணமடைந்தார்.

அவருக்கு கணையப் புற்றுநோய் இருந்தாதகவும், சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பண்டாரி மறைவு்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை நிலை ஆளுநராகவும், திரிபுரா, கோவா, உபி ஆளுநராகவும் இருந்தவர் பண்டாரி.

1985- 86 வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர். இலங்கை விவாகரத்தில் தீவிரக் கவனம் செலுத்தியவரும் கூட.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுக்குத் தலைவராக இவரை முன்பு ராஜீவ் காந்தி நியமித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஒருங்கிணைந்த இந்தியாவில் இடம் பெற்றிருந்த லாகூரில் பிறந்தவரான பண்டாரி, 1950ம் ஆண்டு அயலுறவுப் பணியில் சேர்ந்தார்.

English summary
Former UP Governor and ex-foreign secretary Romesh Bhandari died here last night after a prolonged illness. He was 85. Bhandari is survived by his wife and daughter. Family sources said he was suffering from pancreatic cancer and was admitted to Medanta Hospital in Gurgaon for the last three weeks. Bhandari had served as the Lieutenant Governor of Delhi apart from serving as the governor of Tripura and Goa. He was made the governor of UP in July 1996 when the state was under President's rule. He was the foreign secretary between 1985-86.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X