அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜனவரி 1 முதல் வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை.. அரசு ஊழியர்களுக்கு அரபு நாடுகளின் குட் நியூஸ்!

Google Oneindia Tamil News

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அரசு ஊழியர்களுக்கான வார வேலை நாட்கள் 5 நாட்கள் முதல் நான்கரை நாட்களாக மாற்றியமைக்கப்பட்டு அந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

பொதுவாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்களாகவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு சில தனியார் நிறுவனங்களில் இதே நிலை நீடித்து வருகிறது. எனினும் சில நிறுவனங்கள் திங்கள் முதல் சனி வரை வேலை நாட்களாக வகுத்துள்ளன.

வளைகுடா நாடுகளிலும் நுழைந்தது... செளதி அரேபியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது! வளைகுடா நாடுகளிலும் நுழைந்தது... செளதி அரேபியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது!

ஹப்

ஹப்

இந்த நிலையில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள வளைகுடா நாடுகள் வர்த்தக, சுற்றுலா மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் மையமாக இருக்கிறது. இங்கு தற்போது ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பணி நாட்களாகவும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விடுமுறை நாட்களாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

மனித வளத் துறை

மனித வளத் துறை

இந்த நிலையில் இந்த நடைமுறையை அந்நாட்டு அரசு மாற்றியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் மனித வளத் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் அவார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இனி வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 8 மணி நேர பணியும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 12 மணி வரை என 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது.

உற்பத்தி அதிகரிக்க

உற்பத்தி அதிகரிக்க

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு சனி, ஞாயிறு உள்பட 2.5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தேவைப்பட்டால் வீட்டிலிருந்தபடியே பணியாற்றிக் கொள்ளலாம். உற்பத்தியை பெருக்கவும் வியாபாரத்தை அதிகரிக்கவும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிநாளை அவர்களது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள்

முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள்

முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான இந்தோனேஷியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் சனி, ஞாயிறுகளில்தான் வார இறுதி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகிலேயே வாரத்தில் நான்கரை நாட்கள் பணி நேர நடைமுறையை முதல் நாடாக அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இந்த புதிய நடைமுறை மத்திய கிழக்கு நாடுகளான ரஸ் அல் கைமை, அபுதாபி, ஷார்ஜா, துபாய், புஜைரா, உம் அல் குவைன் ஆகிய பகுதிகளில் பின்பற்றப்படும்.

English summary
UAE changes in working week for 4 and half day only and Saturday, Sunday will be weekend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X