ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்த அதிரடி தடை.. விதிகளை மீறினால்..! அரசு எச்சரிக்கை
அபுதாபி: அபுதாபி விமான நிலைய பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தற்போது உள்ள விமான நிலையத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் எண்ணெய் நிறுவனமான ADNOC செயல்ப்பட்டு வருகிறது.

ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
எண்ணெய் நிறுவனமான ADNOC-யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. அந்த பகுதியே குழம்பாக காணப்பட்டது. இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹவுதி அமைப்பு பொறுப்பேற்பு
அபுதாபி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடக்கும் இடத்திலும் தீப்பற்றியது. ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பான ஹவுதி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக ஹவுதி அமைப்பு சவூதி அரேபியா மீது ஹவுதி அமைப்பு பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ட்ரோன்களைப் பயன்படுத்த தடை
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதும் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணையை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி தடை விதித்துள்ளது.

விதிகளை மீறி பயன்படுத்தினால்...
டிரோன், ஆளில்லா விமானங்களை பயன்படுத்த கூடாது என்று அதன் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இலகு ரக விளையாட்டு விமானங்களையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான வேலைக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்துபவர்கள் இதற்கான தேவையான விதிவிலக்குகள் மற்றும் உரிய அனுமதிகளை கண்டிப்பாக அதிகாரிகளிடம் கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications