For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவியின் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க! கல்லூரி முதல்வரை மிரட்டிய ஏபிவிபி! அதிர்ந்த போன குஜராத்!

Google Oneindia Tamil News

காந்திநகர் : குஜராத்தில் ஏபிவிபி தலைவர் ஜெய்ஸ்வால் பாலிடெக்னிக் கல்லூரி பெண் முதல்வரை மாணவியின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எஸ்.ஏ.எல். பாலிடெக்னி என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

இந்த கல்லூரி ஆண் பெண் என கோ எஜுகேசன் சிஸ்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வராக பெண் பேராசியை ஒருவர் பணியாற்றி வருகிறார்.

ஏபிவிபி மிரட்டல்

ஏபிவிபி மிரட்டல்

இந்நிலையில் குறிப்பிட்ட அந்தக் கல்லூரிக்கு சென்ற இந்துத்வ மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும்
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஜெய்ஸ்வால் தலைமையிலான கும்பல் கல்லூரி பெண் முதல்வரை மாணவி ஒருவரின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

காலில் விழுந்து மன்னிப்பு

காலில் விழுந்து மன்னிப்பு

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அதில் கல்லூரி பெண் முதல்வர் மாணவியிடம் கைகூப்பியும் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஏ.பி.வி.பி தலைவரின் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் குஜராத் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், ஜெய்ஸ்வால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

தலைவர் நீக்கம்

தலைவர் நீக்கம்

ஏபிவிபி தலைவர் ஜெய்ஸ்வாலின் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஏபிவிபி அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரார்த்தனா அமீன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இருக்கும் உறவின் புனிதமான பாரம்பர்யத்தை ஏபிவிபி நிச்சயமாக நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

ஏபிவிபி தலைவர் ஜெய்ஸ்வால் பெரிய தவறு செய்துவிட்டார். அதற்காக அவரை ஏபிவிபி அமைப்பிலிருந்து நீக்கியிருக்கிறோம் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு கூறியுள்ள நிலையிலும் இந்த விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதனிடையே ஜெய்ஸ்வாலின் இந்த செயலுக்குக் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவிக் சோலங்கி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது ஒரு வெட்கக்கேடான செயல் என மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

English summary
In Gujarat, a video of ABVP leader Jaiswal forcing a female polytechnic student to fall at the feet of a female student has gone viral on social media, prompting strong protests from various quarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X