For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய அமைச்சரவையை உருவாக்கும் ஜெகன் மோகன் ரெட்டி.. அமைச்சராகிறாரா நடிகை ரோஜா?

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சரவை அமையவுள்ள நிலையில் அதில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்றைய தினம் அமராவதியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தின் இறுதியில் ஏற்கெனவே கூறியபடி 24 அமைச்சர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன் மோகன் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் புதிய அமைச்சரவை குறித்து ஜெகன் மோகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

”300 முறை” இளம் வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இரு முறை கடத்திச் சென்ற கொடூரன்! தலைநகர் அதிர்ச்சி”300 முறை” இளம் வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இரு முறை கடத்திச் சென்ற கொடூரன்! தலைநகர் அதிர்ச்சி

புதிய அமைச்சர்கள்

புதிய அமைச்சர்கள்

இன்னும் ஓரிரு நாளில் புதிய அமைச்சர்கள் குறித்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சர்கள் வரும் 11 ஆம் தேதி பதவியேற்கிறார்கள். இந்த நிலையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி அளிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 3 ஆண்டுகளாக மக்களுக்கு சேவையாற்றிய சிலருக்கு மட்டும் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.

புதியவர்கள்

புதியவர்கள்

மற்றவர்கள் புதியவர்களாக இருக்கக் கூடும் என தெரிகிறது. அந்த வகையில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நகரி தொகுதியில் ரோஜா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு மக்கள் செல்வாக்கும் இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரோஜா

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரோஜா

மேலும் அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரோஜா, சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் படிக்கும் ஆந்திர மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். முதல்வர் ஸ்டாலினும் கோரிக்கை நிறைவேற்ற உறுதி அளித்தார்.

மக்கள் நல பணிகளில் கவனம்

மக்கள் நல பணிகளில் கவனம்

முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த ரோஜா ஆந்திராவுக்கு கூட சென்றிருக்க மாட்டார். அதற்குள் அவரது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி, புத்தகங்களை அனுப்பியிருந்தார். இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு ரோஜா நன்றி தெரிவித்தார். இது போல் மக்கள் நல திட்டங்களில் ரோஜா கவனம் செலுத்தி வருகிறார்.

அமைச்சராகிறாரா ரோஜா

அமைச்சராகிறாரா ரோஜா

மேலும் ஆந்திராவில் 13 மாவட்டங்களாக இருந்த நிலையில் அது 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயம் இடம் பெறுவர் என ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதனால் நடிகை ரோஜாவுக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரோஜாவுக்கு அமைச்சர் பதவி ஏன்?

ரோஜாவுக்கு அமைச்சர் பதவி ஏன்?

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் வெற்றிக்கு ரோஜாவின் பங்களிப்பும் பிரச்சாரமும் இருந்ததாக கருதப்பட்டது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தனது பிரச்சாரத்தில் கடுமமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுவும் ஒய்எஸ்ஆர் வெற்றிக்கு உதவியது. ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் ரோஜா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாஸல் ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக அந்த வாய்ப்பை ரோஜாவின் கைகளை விட்டு சென்றது. இதையடுத்து ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறை தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார். ஆனால் எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் உத்தரவால் அந்த பதவி ரோஜாவிடம் இருந்து பறிபோனது. அடுத்த ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரோஜாவின் பங்களிப்பு முக்கியம் என்பதால் அவருக்கு முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சர் பதவி கொடுப்பார் என தெரிகிறது.

English summary
Actress Roja will get ministerial berth this time? what will Jagan Mohan Reddy do?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X