For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம்

சென்னை: விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை அஃரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.

நாள் : புதன் கிழமை
தேதி : 14-04-2021
இடம் : அரசூர். விழுப்புரம். காலை 10:30 மணியளவில்.

 Agrotech Integrated Farmers Production Company introduces Education loan

கொரானா பெரும் தொற்றால் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய பெண் விவசாயிகள் மற்றும் வேளாண்மை தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டு வரும் இந்த கால கட்டத்தில் அடுத்து வரும் கல்வி ஆண்டு நெருங்கி வரும் வேளையில் தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியுமா !! என்று மன ரீதியாக சோர்வடைந்து உள்ளனர்.

இதனை உணர்ந்த நமது அஃரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தங்களது உறுப்பினர்களின் துயர் துடைக்கும் வகையில் கல்வி கடன் வழங்கும் திட்டத்தை இந்த தமிழ் புத்தாண்டு அன்று அறிமுகபடுத்த உள்ளது.

மேலும் இந்த திட்டத்தை பற்றி அஃரோடெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் திரு. மாணிக்கம் அவர்கள் கூறியதாவது :- இந்த திட்டம் முதல் கட்டமாக சுமார் 50 நபர்களுக்கு தலா 10000 வீதம் ரூ. 500000 செலவில் இந்த திட்டம் செயல்படுத்த பட உள்ளது.

இதன் மூலமாக எங்களது நிறுவனத்தின் உறுப்பினர்கள் சுமார் 3000 பேர் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டம் சுலபமாக திரும்ப செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
அஃரோடெக் விவசாய உற்பத்தி நிறுவனம் இதற்கு முன்பு பல நலத்திட்டங்களை செயல் படுத்தி உள்ளது.

 Agrotech Integrated Farmers Production Company introduces Education loan

குறிப்பாக ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 3000 குடும்பங்களுக்கு விலையில்லா ஆடு வழங்கி தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல நலத்திட்டங்களை விழுப்புரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.

மேலும் இந்த கல்வி கடன் திட்டம் ஏழை பெண் விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் ஏற்படுத்திய அஃரோடெக் நிறுவனத்திற்கு பெண் விவசாயிகள் மற்றும் பயனாளிகள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நிறுவன முதன்மை இயக்குனர் திரு. மாணிக்கம் அவர்கள் மற்றும் விழுப்புரம் கிளையின் இயக்குனர் திருமதி. சீதா. மற்றும் ஆனந்தபாபு, மோகன் தாஸ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்..
மேலும் இந்த நிகழ்ச்சி அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் படி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X