அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 ஆம் வகுப்பில் ஸ்கூல் டாப்பர்.. நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சல் அரியலூர் மாணவி தற்கொலை

Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் அரியலூர் துளாரங்குறிச்சியை சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் விவகாரத்தில்... எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்... கே.எஸ்.அழகிரி சாடல்..! நீட் விவகாரத்தில்... எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்... கே.எஸ்.அழகிரி சாடல்..!

தனியார் பள்ளி

தனியார் பள்ளி

நாமக்கல்லில் தனியார் பள்ளியில் படித்த இந்த மாணவி 10ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தார். அது போல் 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562.28 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மருத்துவக் கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கனிமொழி, தேர்வு முடித்து வீட்டுக்கு வந்து நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் தனக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை கிடைக்குமா என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என பெற்றோர் கதறுகிறார்கள்.

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுத அச்சமடைந்த மாணவன் தனுஷ் அந்த தேர்வை எழுவதுற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவன் ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3ஆவது முறையாக தேர்வு எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எண்ணிக்கை

தற்கொலை எண்ணிக்கை

மாணவி கனிமொழியுடன் சேர்த்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நீட் விலக்கு மசோதா நேற்றைய தினம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே மருத்துவ சேர்க்கை நடத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

Recommended Video

    நீங்க தலைகீழாக நின்னாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும்.. பாஜக அண்ணாமலை
    தோல்வி

    தோல்வி

    நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போராடி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அரியலூர் அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து இன்று தூக்கிட்டு இறந்த மாணவி கனிமொழியும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். வருங்கால இந்தியாவின் தூணாக உள்ள மாணவர்கள் இது போல் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

    English summary
    Ariyalur Kanimozhi commits suicide because of stress over Neet Exam which was conducted on Sep 12.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X