பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 டோஸ் தடுப்பூசி போட்ட 281 பேருக்கு மீண்டும் கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாக மாறிய மெடிக்கல் காலேஜ்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் 281 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் புதிய நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது எஸ்டிஎம் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

 கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு விவரம்

கொரோனா பாதிப்பு விவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8, 318 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,45,63,749 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 10,967 பேர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,88,797 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள

கொரோனாவை எதிர்கொள்ள

இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது அதிக வீரியத்துடன், வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தி உள்ளன. கோவிஷீல்டு, கோவாக்ஸின் போல் அல்லாமல் ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடிய ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.

எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரி

எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரி

வடகர்நாடகாவின் தார்வாட் பகுதியில் ஒரு முக்கிய மருத்துவ மையமாக விளங்கி வருவது SDM காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ். இந்தக் கல்லூரியில் சென்ற வாரம் கலாச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி 2 தவணை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

400 பேரில் 281 பேருக்கு கொரோனா

400 பேரில் 281 பேருக்கு கொரோனா

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களில் சில மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதை அடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் கல்லூரியில் இருந்து 400 மாணவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மேலும் 77 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் 281 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையே ஹாட்ஸ்பாட் ஆனது

மருத்துவமனையே ஹாட்ஸ்பாட் ஆனது

இதனால் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக எஸ்டிஎம் மெடிக்கல் சயின்ஸ் காலேஜ் மாறிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது. மாணவர்களின் விடுதிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்கள் மட்டும் ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வாயிலை இழுத்துப் பூட்டிய நிர்வாகம் புதிய உள்நோயாளிகளை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் கொரேனா நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

பொதுமக்கள் எச்சரிக்கை

பொதுமக்கள் எச்சரிக்கை

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் பாதிப்பில்லை என்றாலும் கூட, பொதுமக்கள் இந்த நோய் முழுமையாக வெளியேறும் வரை பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும், தனிமனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்

கடந்த 24 மணிநேரத்தில்

கெரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியாவில் இதுவரை 77,90,78,165 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 43,15,80,097 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1,21,06,58,262 டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் முதல் டோஸ் 23,45,889 இரண்டாவது டோஸ் 50,12,128 ஆக மொத்தம் 73,58,017 டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 4,46,21,560 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 2,35,51,552 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 6,81,73,112 டோஸ் போடப்பட்டுள்ளது.

English summary
A medical college in Karnataka's Dharwad has become a Covid hotspot with 77 more testing positive, taking the total number of cases to 281. Fresh admissions to the hospital have been suspended. The entry to the hospital has been blocked and of those admitted only the one who test negative will be discharged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X