மனைவியை மறைத்து.. இளம்பெண்ணுடன் உல்லாசம்.. ரூ.20 லட்சம்+ 200 கிராம் நகை + தங்கையையும் விடாத இளைஞர்
பெங்களூர்: தனக்கு மனைவி இருப்பதை மறைத்து பெங்களூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர், அந்த பெண்ணின் அக்காவுடன் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளை ‛அபேஸ்' செய்தார். இதுபற்றிய புகாரில் தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் வசித்து வருபவர் சுபம் சுக்லா. இவருக்கு வயது 29. இவருக்கும் பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

சுபம் சுக்லா, திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் சேர்ந்து சிறிது காலம் வாழ வேண்டும் என்றும், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் வேலைக்காக மும்பை செல்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினார். ஆனால் அவர் மும்பை செல்லவில்லை. பெங்களூரில் சுபம் சுக்லாவுடன் வீடு எடுத்து தங்கினார். இருவரும் திருமணம் செய்யாமல் 3 ஆண்டுகள் வரை கணவன் - மனைவி போல் வாழ்ந்தனர்.
இந்த சமயத்தில் அவ்வப்போது வெவ்வேறு காரணத்தை கூறி சுபம் சுக்லா, அந்த பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை வாங்கி உள்ளார். மொத்தமாக ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்க நகையை சுபம் சுக்லா வாங்கியிருந்தார். இதற்கிடையே தான் சுபம் சுக்லா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.
சுபம் சுக்லாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதை அந்த இளம்பெண் கண்டுபிடித்தது. இதுபற்றி கேள்வி கேட்டு அவர் பிரச்சனை செய்தார். அதற்கு சுபம் சுக்லா, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்வதாக கூறினார். இதனால் இளம்பெண் மீண்டும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் சுபம் சுக்லா, தனது மனைவியை கைவிடாமல் தொடர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவிததுள்ளார். இதனால் மோசடியை அறிந்த இளம்பெண் சுபம் சுக்லா மீது போலீசில் புகார் செய்தார். மனைவி இருப்பதை மறைத்து திருமண ஆசைகாட்டி ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் நகையை பறித்து கொண்டதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஏமாற்றியதாகவும் புகார் அளித்தார்.
அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் சகோதரியான மைனர் பெண்யையும் ஏமாற்றி சுபம் சுக்லா பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இந்த புகாரின் பேரில் பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபம் சுக்லாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications