பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே! என்ன புதுசா இருக்கு.. படகு போல பெங்களூரு சாலையில் சென்ற வாகனம்.. வியந்து பார்த்த வாகன ஓட்டிகள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பரபரப்பு மிக்க பெங்களூரு சாலையில் வித்தியாசமான ஒரு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த வாகனம் சாலையில் சக பேருந்து மற்றும் கார்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சென்றது. வித்தியாசமான இந்த வாகனத்தை வாகன ஓட்டிகள் பலரும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. பெங்களூருவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் இத்தகைய பெருமை அந்த நகரத்திற்கு உண்டு.

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். சாலைகளிலும் வாகன போக்குவரத்து பற்றி சொல்லவே வேண்டாம். எங்கு திரும்பினாலும் வாகனங்கள் அணி வகுத்து செல்வதையே காண முடியும்.

நெஞ்சே பதறுதே.. முதியவரை 1 கிமீ தரதரவென ரோட்டில் இழுத்துச்சென்ற பைக்.. பரபரப்பான பெங்களூரு! நெஞ்சே பதறுதே.. முதியவரை 1 கிமீ தரதரவென ரோட்டில் இழுத்துச்சென்ற பைக்.. பரபரப்பான பெங்களூரு!

கண் சிமிட்ட மறந்த வாகன ஓட்டிகள்

கண் சிமிட்ட மறந்த வாகன ஓட்டிகள்

இத்தகைய பரபரப்பு மிக்க பெங்களூரு சாலையில் தனித்துவமான ஒரு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த வாகனம் சாலையில் சக பேருந்து மற்றும் கார்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சென்றது. வித்தியாசமான இந்த வாகனத்தை வாகன ஓட்டிகள் பலரும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ட்விட்டரில் வீடியோவை வெளியிட்ட..

ட்விட்டரில் வீடியோவை வெளியிட்ட..

சாலையோரம் சென்ற சிலரும் இந்த வித்தியாசமான வாகனத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த வாகனம் தொடர்பான வீடியோக்கள் இணையத்திலும் பரவியது. நெட்டிசன்கள் பலரும் வியந்து இந்த வாகனத்தை பார்த்தனர். ட்விட்டரில் ரேவந்த் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். ஜேபி நகரில் இந்த வாகனத்தை பார்தத்தாதாகவும் மனித சக்தியால் இயக்கப்படும் இந்த வாகனம் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் பதிவிட்டு இருந்தார்.

சிறிய படகு போல இருந்த வாகனம்

சிறிய படகு போல இருந்த வாகனம்

3 சக்கரங்கள் கொண்ட இந்த வாகனம் பார்ப்பதற்கு சிறிய படகு போல உள்ளது. வெலோமொபைல் என்று அழைக்கப்படும் வாகனம் பைசைக்கிளை போன்று மனித சக்தியால் இயங்கக் கூடியது. இந்த வாகனத்தை பெங்களூருவில் ஓட்டி சென்ற பனீஷ் நகராஜா என்பவர் கூறும் போது, " இந்த வாகனத்தை மக்கள் மிகவும் வியந்து பார்த்தனர். பலரும் இதை ஓட்டிப்பார்க்கவும் விருப்பம் தெரிவித்தனர். எனினும் இந்த வாகனம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் பலரும் சந்தேகமும் எழுப்பினர் என்றார்.

 நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

பெங்களூரு சாலையில் வினோதமாக தென்பட்ட இந்த சாலைகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டனர். அதேபோல், பெங்களூரு போன்ற அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் இத்தகைய வாகனத்தை இயக்கி செல்வது ரொம்பவே கஷ்டம்தான் எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர். அதேபோல், சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் சமீபத்திய காலத்தில் இதுபோன்ற வாகனம் பயன்பாடு அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது எனவும் சிலர் கூறினார்.

English summary
A strange vehicle was driving on the busy Bengaluru road. Designed to seat only one person, the vehicle competed with its fellow buses and cars on the road. Many motorists were looking at this strange vehicle without blinking an eye.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X