பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா உத்துப் பாருங்க.. இதுக்கு பேரு ரோடாம்.. பதறும் வாகன ஓட்டிகள்! பெங்களூருக்கு வந்த சோதனை

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் பெய்த மழையின் காரணமாக நைஸ் ரோடு ஜங்ஷன் ரோட்டில் ஏராளமான பள்ளங்கள் உருவாகி உள்ளன. இந்த பல்லாங்குழி ரோடால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படும் நிலையில் பயோகான் செயல் தலைவர் கிரண் மசூம்தார் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஐடி தலைநகர், பூங்கா நகரம் என புனைப்பெயருடன் பெங்களூர் புகழப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு பெங்களூர் நகரின் மக்கள்தொகை உயர்ந்து வருவதற்கு அங்குள்ள ஐடி நிறுவனங்கள் தான் முக்கிய காரணம்.

பெரிய குட்நியூஸ்! அமெரிக்காவில் கேன்சர் மருந்து சோதனை வெற்றி! 100% குணம் தரும் மருந்து கண்டுபிடிப்பு பெரிய குட்நியூஸ்! அமெரிக்காவில் கேன்சர் மருந்து சோதனை வெற்றி! 100% குணம் தரும் மருந்து கண்டுபிடிப்பு

ஐடி நிறுவனங்கள் தவிர ஆயத்தஆடை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெங்களூரில் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

பெங்களூர் ரோடு

பெங்களூர் ரோடு

இத்தகைய சிறப்பு மிகுந்த பெங்களூர் நகரில் ரோடு இன்னும் கூட மோசமாக உள்ளது. குறிப்பாக பருவமழை பெய்தால் போதும் ரோடுகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றுவது வழக்கமாகி விடுகிறது. இவ்வாறு உருவாகும் குண்டும், குழிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் தவறுகிறது. இது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

உயிரிழப்புகள்

உயிரிழப்புகள்

இத்தகைய ரோடுகளின் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதும், காயமடைவதும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மட்டும் பெங்களூர் மாநகராட்சி உள்பட சம்பந்தப்பட் துறை அதிகாரிகள் ஆக்டிவ்வாக செயல்படுவதும் அதன்பிறகு மந்தமாகி விடுவதும் மாறி மாறி நடக்கிறது.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இதனால் பல சமயங்களில் ரோடு பள்ளங்களை அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக சாலை பள்ளங்களில் கடல் கன்னி, முதலை இருப்பது போல் ஓவியங்கள் தீட்டப்பட்டு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் செயல்களும் நடந்துள்ளன. ஆனாலும் பருவமழையின்போது ரோடு பள்ளமாவது தொடர்ந்து வருகிறது.

மீண்டும் பள்ளமான ரோடு

மீண்டும் பள்ளமான ரோடு

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக பெங்களூரின் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் நகரில் முக்கிய சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. குறிப்பாக பெங்களூர்-மைசூர் சாலை பல்லாங்குழி போன்று குழிகள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக நைஸ்ரோடு ஜங்ஷனில் குண்டும், குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரோடு அதிகளவில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதில் ‛‛ரோட்டில் பள்ளம் உள்ளதா? பள்ளங்களுக்கு இடையே ரோடு அமைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவின் ஐடி தலைநகர் வரவேற்கிறது. பெங்களூர்-மைசூர் ரோட்டின் அருகே உள்ள நைஸ் ரோடு ஜங்ஷனி்ல ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

பயோகான் செயல் தலைவர்

பயோகான் செயல் தலைவர்

இதனை பயோகான் நிறுவனத்தின் செயல் தலைவரான கிரண் மசூம்தார் ஷா, ‛‛அதிர்ச்சியும், அவமானமாக உள்ளது'' என வருத்தத்தோடு விமர்சனம் செய்துள்ளார். மேலும் நெட்டிசன்கள் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகளவில் பெயர் பெற்ற பெங்களூர் நகரில் ரோடு பருவமழையின்போது மோசமாவது தொடர்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

English summary
After the rain Bangalore road have multiple potholes on Nice Road Junction Road. Biocon executive chairman Kiran Masoomdhar Shah and some other netizens criticized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X