நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது போலி! சமஸ்கிருதம் 3வது மொழி! கர்நாடக கல்விக்கொள்கை குழு அறிக்கை
பெங்களூரு: நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது, பித்தாகரஸ் தியரம் ஆகியவை போலியான செய்தி என்று புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கர்நாடக அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மாணவர்களுக்கான புதியக் கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை தயாரிக்க மாநில அரசு தரப்பில் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய பரிந்துரைகள் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.

கர்நாடகாவில் மாணவர்களுக்கான புதியக் கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை தயாரிக்க 26 குழுக்களை மாநில அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய பரிந்துரைகள் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புதியக் கல்விக் கொள்கையின் கீழ் மாணவர்கள் அனைவரும் இந்தியாவைப் பற்றிய அறியும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனிடையே அந்த அறிக்கையில், பித்தாகரஸ் தியரம் மற்றும் விஞ்ஞானி நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்து விவகாரங்கள் அனைத்தும் போலியான செய்தி என்றும், இவை எல்லாம் வேத காலத்து கணித்தத்திலேயே இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதியக் கல்விக் கொள்கையின் கீழ் மாணவர்கள், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை பயில வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் குழுவின் தலைவர் வேணுகோபால் கூறுகையில், புவி ஈர்ப்பு விசை மற்றும் பித்தாகரஸ் தியரம் ஆகியவை பற்றி கூகுளில் கூட சில தரவுகள் உள்ளன. இது ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்தது. இதனை நீங்கள் நம்பலாம், நம்பாமலும் போகலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த குழுக்கள் தகுந்த ஆதாரங்களின்படி, சில ஆவணங்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கல்விக் கொள்கை ஒரு பிரபல ஐஐடி பேராசிரியரின் தலைமையில் தயாரிக்கப்பட்டது. இது மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள ஐஐடியின் வி ராமநாதன் குழுவுக்கு தலைமை தாங்கினார் என்று தெரிவித்தார். கல்விக் கொள்கை குறித்த கர்நாடக அரசின் பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகளுக்கு கல்வியாளர்கள் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications