Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் பூத்த கள்ளக்காதல்.. கிராம பஞ்சாயத்து தலைவிக்கே இந்த நிலைமையா? ஆசை அடங்காத கணவன்! கொடுமை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காலங்கள் மாறினாலும், தொழில்நுட்பம் பெருகினாலும், கல்வி அதிகரித்தாலும், வரதட்சணை மட்டும் இன்னும் அப்படியே உள்ளது.. வரதட்சணை கொடுமைகளின் வடிவங்கள்தான் மாறுகிறதே, தவிர, வரதட்சணை முற்றிலுமாக இந்தியாவை விட்டு நீங்கவில்லை.

நம்முடைய நாட்டில் பெண்கள் எவ்வளவுதான் படித்து முன்னேறினாலும், வரதட்சணை என்ற விஷயத்தில் சிக்கி சின்னாபின்னமாகிவிடுகிறார்கள்.. இதனால், குடும்ப வன்முறைகளும் அதிகரித்து கொண்டே போகின்றன..

Bangalore panchayat president Dowry

அடங்காத வரதட்சணை கொடுமை

வரதட்சணை பெறுவதும், கொடுப்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று சிலர் சொன்னாலும், பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு காரணமாகிவிடுகிறபோது, வரதட்சணை என்பது சமூகப்பிரச்சனையாகவே கருதப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்புஉத்தரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.

ஹரித்வார் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு, கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது.. மகளின் திருமணத்துக்கு ரூ.45 லட்சம் பெண்ணின் வீட்டில் செலவு செய்துள்ளனர்.. இதைத்தவிர பெரிய கார், நகைகள் என அள்ளி தந்திருக்கிறார்கள். எனினும், மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், இன்னொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக கேட்டுள்ளார் மாமியார். அத்துடன், மருமகளையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியிருக்கிறார்.

மருமகளுக்கு எச்.ஐ.வி. ஊசி

ஒருகட்டத்தில், மருமகளுக்கு எச்ஐவி தொற்று சிரின்ஜை பயன்படுத்தி, ஊசி செலுத்தி, நோய் பாதிப்பை உண்டாக்கிவிட்டார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனைக்கு சென்ற பரிசோதித்தபோதுதான், எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், கோர்ட்டுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கும்படி போலீசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு கொடுமை கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்துள்ளது.. பெங்களூரு அர்பன் மாவட்டம் பவகடா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ருதி.. 34 வயதாகிறது.. இவர் கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்..

வரதட்சணை கொடுமை

இவரது கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன்.. நாகசந்திரா பகுதியை சேர்ந்த இவர், ஆடிட்டராக உள்ளார். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 4 வயதில் ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.
திடீரென, ஸ்ருதியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கோபாலகிருஷ்ணன் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்குநடுவில் கோபாலகிருஷ்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.. இந்த விஷயம் தெரிந்து ஸ்ருதி அதிர்ச்சி அடைந்து கணவரிடம் கேட்டுள்ளார். இறுதியில், கணவன், மனைவி இடையே இதுசம்பந்தமான மோதல் வெடித்து வந்துள்ளது. அத்துடன் வரதட்சணை கொடுமையும் ஸ்ருதிக்கு அதிகரித்துள்ளது.

பஞ்சாயத்து தலைவிக்கே இந்த கதியா

எவ்வளவோ சொல்லியும், அந்த பெண்ணுடனான உறவை கணவன் கைவிடாததால், விரக்தியடைந்த பஞ்சாயத்து தலைவி ஸ்ருதி, தன்னுடைய 4 வயது குழந்தை ரோஷிணியை கொலை செய்துள்ளார்.. பிறகு, வீட்டில் உள்ள ஃபேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்..

தற்கொலை செய்துகொள்வதற்குமுன்பு கடிதம் ஒன்றையும் ஸ்ருதி எழுதி வைத்துள்ளார்... இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஸ்ருதி, ரோஷிணி ஆகியோரின் உடல்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவிக்கே இந்த நிலைமையா? என்று அந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+