பயங்கரம்..பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து.. 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்
Recommended Video

பெங்களூர்: பெங்களூரு விமான கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின.
பெங்களூர் எலகங்கா பகுதியில், சர்வதேச விமான கண்காட்சி இன்றுடன் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளை சேர்ந்த முன்னணி விமானங்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. சாகசங்கள் செய்கின்றன. இதில் ரபேல் போர் விமானமும் கூட சாகசங்கள் செய்து காட்டியிருந்தது.

இந்த கண்காட்சியை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். வெளிநாட்டினரும் வந்துள்ளனர். இன்றும் அவ்வாறு மக்கள் வருகை தந்திருந்தனர்.
விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு, வெளியே கேட் எண் 5 அருகே, நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தி வைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
Vehicles got fire at parking area of #AiroIndia show at Yalahanka. Fire fighters On the spot.@DGP_FIRE @SunilagarwalI @KarnatakaVarthe pic.twitter.com/5YAk2izsDx
— Karnataka Fire Dept (@KarFireDept) February 23, 2019
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென வாகன நிறுத்தம் உள்ள இடத்தில், புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவியது. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

காய்ந்த புல்களை அகற்றாமல் விட்டிருந்ததுதான், இந்த தீ விபத்துக்கு முக்கிய காரணம். சுமார் 400 ஏக்கரில் இந்த புல்வெளி இருந்துள்ளது. அதை முதலில் அகற்றியிருக்க வேண்டும். அல்லது புல்வெளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதுதான் தீ விபத்துக்கு முக்கிய காரணம்.

தீ விபத்தால் அந்த பகுதி முழுக்க கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவியது. இந்த விபத்துக்கு சதி வேலை ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications