ஜெயலலிதாவின் நகைகளை எடுத்து செல்ல 6 இரும்பு பெட்டிகள்.. தமிழ்நாடு அரசுக்கு கர்நாடகா கோர்ட் உத்தரவு!
பெங்களூர்: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி உள்ளிட்ட நகைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல 6 இரும்புப் பெட்டிகளை மார்ச் 6, 7-ந் தேதிகளில் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 2014-ம் ஆண்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

கர்நாடகா தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நீதிபதி குன்ஹா தீர்ப்பை ரத்து செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும் 4 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தனர்.
இதனிடையே கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்டவைகளை ஏலம் விட உத்தரவிட கோரியிருந்தார். இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், ஜெயலலிதாவின் அனைத்து நகைகளையும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கில் நேற்று நீதிபதி மோகன் முன்னிலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவை அடுத்த மாதம் 6,7 தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதனைப் பெற்றுக் கொள்ள உள்துறை முதன்மை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, போட்டோகிராபர், வீடியோகிராபர் ஆஜராக வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதாவின் நகைகளை எடுத்துச் செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வரவும் நீதிபதி மோகன் உத்தரவிட்டார். மேலும் சொத்து குவிப்பு வழக்கு செலவுக்காக கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு அரசு ரூ5 கோடி செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகை விவரங்கள்:
28 கிலோ தங்கம்- வைர நகைகள்
800 கிலோ வெள்ளி நகைகள்
11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள்
740 விலை உயர்ந்த செருப்புகள். இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதாவின் நகைகளை கொண்டு வர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications