‘ஹாட்’ சிட்டியான பெங்களூர்.. 75 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. அலறும் மக்கள்
பெங்களூர்: பெங்களூர் கடந்த 75 ஆண்டுகள் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் வெயில் வாட்டி
வதைத்துள்ளது. கடந்த 1951ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 13ம் தேதி பெங்களூரில் 33.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயில் பதிவான நிலையில் அதன்பிறகு இப்போது தான் அதனை நெருங்குவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பொதுவாக.. செப்டம்பர் மாதத்தில் பெங்களூரில் மழை இருக்கும். வெயில் குறைந்து இதமான சூழல் நிலவும். தென்மேற்கு பருவமழை தனது இறுதிக்கட்டத்தில் பூமியை நனைத்தபடி கொட்டும்.

ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பெங்களூர் நகரில் போதிய அளவுக்கு மழை இல்லை. குறிப்பாக
செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் மழை மறைந்தே போய்விட்டது. இதனால் வெயில் வெளுத்து வாங்கி
வருகிறது.
கடந்த 6ம் தேதி பெங்களூர் நகரில் அதிகபட்சமாக 32.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெயில் பதிவானது.
அதன்பிறகு 7 ம் தேதி பெங்கூளர் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31.9 டிகிரி செல்சியஸ்ஸாக பதிவானது. தற்போது பெங்களூர் நகரின் வெயில் அளவு குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்து வருகிறது.
இது கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வெயில் அளவாகும். இதற்கு முன்பு கடந்த 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம்
தேதி பெங்களூர் நகரின் அதிகபட்ச வெயில் 33.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதன்படி இவ்வளவு வெயில்
ஒருபோதும் இல்லை. ஆனால் இந்த முறை அதிகபட்சமாக செப்டம்பர் 6ம் தேதி 32.2 டிகிரி செல்சியஸ் வரை வெயில்
பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்


Click it and Unblock the Notifications
