வறட்சியை நோக்கி வேகமாக நகரும் பெங்களூர்.. தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை! ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரில் நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.2000ஆக இது உயர்ந்திருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை சரி செய்ய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இது குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரில் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
"பெங்களூருக்கு ஒவ்வொரு நாளும் 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 147 கோடி லிட்டர் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. அதேபோல 65 கோடி லிட்டர் ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கிறது. மொத்தம் சேர்த்தால் 210-212 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் காவிரி 5 திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இதன் பின்னர் தண்ணீர் பற்றாக்குறை குறைய வாய்ப்பிருக்கிறது. காவிரி மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு குடிநீர் இருப்பு வைத்து, அதை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். தற்போது கேஆர்எஸ் அணையில் 11.04 டிஎம்சி, கபினியில் 9.02 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. இது ஜூன் வரை போதுமானதுதான். இருப்பினும், 313 இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கெனவே வறண்டு போன 1200 போர்வெல்களுக்கு புத்துயிர் அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இது தவிர, பெங்களூரில் வறண்டு போன ஏரிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் விதமாக ஏரிகளில் நீரை நிரப்பவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் வறண்டுபோன ஆழ்துளை கிணறுகளில் நீர் மீண்டும் ஊற்றெடுக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications