இதுதான் காரணம்.. ஒரே நாள் இரவு 125 மி.மீ மழை.. வெள்ளத்தில் மிதந்த பெங்களூர்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு மட்டும் பெய்த மழையால் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதந்துள்ளது. ஒரே இரவில் 125 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது.
ஜூலை மாதத்தில் கனமழை கொட்டியது.
இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பின. இந்த நிலையில் இந்த மாதாத்தின் தொடக்கத்திலும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.

பல இடங்களில் வெள்ளம்
அதே போல் தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய கனமழை
இப்படி இருக்கையில், பெங்களூருவில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், நகரின் முக்கிய சந்திப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று இரவு ஒருநாள் விடிய விடிய கொட்டிய கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் முக்கிய பகுதிகள், சாலைகளில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. இதனால் சில இடங்களில் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது.

மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
குறிப்பாக முக்கிய இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதளத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இல்லாத பட்சத்தில் வீடுகளை விட்டு மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று பெங்களுரூ மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

மழை அளவு
பெங்களூரு நகரம் இப்படி வெள்ளத்தில் மிதப்பதற்கு நகரத்தின் பல இடங்களில் ஒரே இரவில் 125 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதே காரணம் ஆகும். பெங்களூருவின் கிழக்கு மாரத்தஹள்ளி பகுதியில் அதிகாலை 1.15 மணி நேரப்படி 125மிமீ மழையும், மகாதேவபுரா தொட்னேக்கண்டி பகுதியில் 125 மிமீ மழையும், வடக்குபண்டிகொடகேஹள்ளி 125.5 மிமீ மழையும் பெய்துள்ளது. கிழக்கு எச்.ஏ.எல் விமான நிலையம் பகுதியில் அதிகாலை 2.15 மணி நிலவரப்படி 126 மிமீ, தெற்கு தெற்குசோழநாயக்கனஹள்ளி பகுதியில் 135 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications