பெங்களூரில் கல்லா கட்டும் மோமோஸ் வியாபாரி.. மாதம் ரூ.31 லட்சம் வருமானம்! ரெய்டு வராமல் இருந்தால் சரி
பெங்களூர்: கடின உழைப்பு வெற்றியை தரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் பெங்களூரில் மோமோஸ் விற்கும் இளைஞர். இவர் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் என மாதம் ரூ.31 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் கே.கே மோமோஸ் மற்றும் சூப்ஸ் என்கிற கடையை இவர் நடத்தி வருகிறார். கேசி பரேரா என்ற இன்ஸ்டாகிராம் பதிவர் இந்த கடையில் ஒரு நாள் முழுவதும் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். இதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இந்த வீடியோவில், மோமோஸ் விற்பனையாளரின் வருவாய் மற்றும் அவரது கடின உழைப்பு குறித்துப் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பரேரா வெளியிட்ட வீடியோவில், "மோமோஸ் கடைக்கு நான் சென்றபோது, ஒரு மணி நேரத்தில் 118 பிளேட்கள் விற்பனை செய்யப்பட்டன. கடை மூடும் நேரத்தில், சுமார் 950 பிளேட்கள் விற்பனையாகிவிட்டன. ஒரு பிளேட்டின் விலை ரூ. 110. இதன் மூலம், ஒரு நாளின் வருவாய் ரூ. 1,00,000-ஐ எட்டியது. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம், இவர் லட்சங்களில் சம்பாதிக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியான பிறகு, பலரும் மோமோஸ் விற்பனையாளரின் கடின உழைப்பைப் பாராட்டினர். இந்த வீடியோ எட்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது. எனினும், மோமோஸ் விற்பனையாளரின் நிகர லாபம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் சிலர் வியந்தாலும், வேறு சில பயனர்கள் இந்த கணக்கு குறித்து சந்தேகம் எழுப்பினர்.
"தெருவோரக் கடையில் ஒரு பிளேட் மோமோஸ் ரூ. 110 என்பது சாத்தியமில்லை. ஒருவரால் 900 பிளேட்கள் விற்பனை செய்யவும் முடியாது" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு நிமிடம் ஒதுக்கினால், 900 பிளேட்களை விற்க 900 நிமிடங்கள் அதாவது 15 மணி நேரம் ஆகும். இடைவேளை இல்லாமல் இவ்வளவு நேரம் வேலை செய்வது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வருவாய் மற்றும் லாபத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தையும் சிலர் சுட்டிக் காட்டினர். இருப்பினும், இந்த வீடியோ சிறு வணிகர்களின் விடா முயற்சி, சமூக ஊடகங்கள் மூலம் அவர்களின் வளர்ச்சியையும் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக, யூடியூபர் சார்த்தக் சச்தேவா கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு வீடியோவில், மோமோஸ் கடை நடத்துவது பலரும் எதிர்பார்த்ததை விட லாபகரமானது என்று குறிப்பிட்டிருந்தார். பரேராவைப் போலவே, சச்தேவாவும் ஒரு பிரபலமான தெரு உணவுக் கடையில் ஒரு நாள் முழுவதும் வேலை செய்து, அதன் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் வருமானத்தைப் பற்றி விளக்கினார். இந்த வீடியோ பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அந்த மோமோஸ் கடை ஒரு நாளைக்கு சுமார் ரூ. 8,000 நிகர லாபம் ஈட்டியதாகவும், அதன் உரிமையாளர் ஆண்டுக்கு சுமார் ரூ. 30 லட்சம் சம்பாதித்ததாகவும் சச்தேவா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications