பெங்களூரில் நிர்வாணமாக கார் ஓட்டி இளம்பெண்ணை சீண்டிய விவகாரத்தில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி
பெங்களூர்: பெங்களூரில் உடலில் ஒரு துணி இல்லாமல் நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற நபர் , பணி முடிந்து தனது வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை சீண்டினார். அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த பெண் போலீசில் புகாரளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகிறார். அவர் பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் முடித்துவிட்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு கார் வேகமாக வந்து நின்றது. இதனால் அவர்
பயந்துபோனார். உடனடியாக அவர் சற்று விலகி சென்றார்.

அப்போது கார் கண்ணாடியை திறந்த நபர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருந்தார். மேலும் அவர் அந்த பெண்ணை காருக்குள் ஏறும்படி கூறினார். பெண் மறுத்து அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார். ஆனால் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து சென்று காரில் ஏறும்படி
கட்டாயப்படுத்தினார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நிர்வாணமாக காரில் வந்த நபர் என்னை காருக்குள் ஏறும்படி கூறி தொல்லை கொடுத்தார். இது பட்டப்பகலில் நடந்தது. அந்த பகுதியில் மேலும் சிலர் சென்றனர். ஆனால் யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை. இதனை பார்த்து காரில் இருந்த நபர் சிரித்தார்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் பெங்களூர் நகர போலீசாரை ‛டேக்' செய்து வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராமில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் போலீசார் கூறினார். ஆனால் அவர் சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஹெப்பகோடி போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ‛‛சம்பவம் நடந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தின் போலீஸ்காரர் விருஷபாந்த்திரா சம்பவ இடத்துக்கு சென்றார். நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டுள்ளோம்.
இதுபற்றி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவரிடம் கூடுதல் விவரங்களை கோரியுள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வோம். முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விவரங்கள் சேகரித்து வருகிறோம்’’ என்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications