ஆண் நண்பருடன்.. அந்த மாதிரி பழக்கம்! 5 வயது மகன் என்று கூட பார்க்கல! பெங்களூர் பெண்ணின் வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: திருமணத்தை மீறிய உறவு காரணமாக, தனது கணவர் மற்றும் 5 வயது மகனை 27வயது இளம்பெண் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் மொத்த கர்நாடகாவையும் உலுக்கியிருக்கிறது.

திருமணத்தை மீறிய உறவுகள் எந்த எல்லைக்கு கொண்டு செல்லும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரும் கூறுகின்றனர். என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்.

Bengaluru Shocker

திருமணமும் சண்டையும்

கர்நாடக மாநிலம் குணிகல் தாலுகாவை சேர்ந்தவர் அபிநந்தன்(38). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஹரிணி என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் யதுவீர் கவுடா என்கிற குழந்தை இருக்கிறது. வடக்கு பெங்களூரின் சிக்கபானவரா பகுதியில் இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

போலீசுக்கு போன்

இப்படி இருக்கையில் நேற்று காலை, ஹரிணி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து.. தனது கணவர் மற்றும் குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று கிடப்பதாக கூறியிருக்கிறார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். கணவர் அபிநந்தனும், குழந்தை யதுவீரும் உயிரிழந்துவிட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். பின்னர் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகமடைந்த போலீஸ்

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் போலீசாருக்கு பல்வேறு கோணங்களில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஹரிணி வீட்டிற்கு போலீசார் போகும் போது வீட்டின் வராண்டாவில் ரத்தக்கறை போன்ற தழும்புகள் இருந்திருக்கின்றன. மட்டுமல்லாது வீட்டில் இருந்த சிசிடிவி வேலை செய்யாமல் இருந்திருக்கிறது.

ஆண் நண்பர்

இது தவிர.. ஹரிணிக்கு அவரது ஆண் நண்பருடன் பழக்கம் இருந்தது என்றும்.. சில மாதங்கள் அந்த நபருடன் ஹரிணி தனியாக வாழ்ந்து வந்தார் என்றும் உயிரிழந்த அபிநந்தனின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள். மறுபுறம்.. அபிநந்தனுக்கு மனநல பிரச்சனை இருந்தது என்று ஹரிணி வீட்டு தரப்பில் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இதெல்லாம் காவல்துறையினரின் சந்தேகத்தை அதிகரித்த நிலையில், ஹரிணியிடம் தங்கள் பாணியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

விசாரணையில் வெளிவந்த உண்மை

அதில் திடுக்கிடும் உண்மை வெளியாகியிருக்கிறது. அதாவது.. ஹரிணி தனது கணவரை முதலில் கொலை செய்திருக்கிறார். அவர் தூங்கும்போது.. தலையைனையை வைத்து முகத்தை மூடி கொலை செய்திருக்கிறார். இதை மகன் பார்த்துவிட்ட நிலையில் வேறு வழயின்றி மகனையும் அதேபோல கொலை செய்திருக்கிறார். பின்னர் எதுவும் தெரியாது போல போலீசுக்கு போன் செய்து வரவழைத்திருக்கிறார். போலீசார் வந்து பார்த்தபோது.. அபிநந்தனின் காதுகளிலிருந்து ரத்தம் கசிந்திருக்கிறது. இதை வைத்தே.. இது கொலைதான் என்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டனர்.

காரணம் என்ன?

தலையணை வைத்து முகத்தை மூடும்போது.. ரொம்பவும் அரிதாக திடீரென காது ஜவ்வு கிழிந்து அல்லது மெல்லிய நரம்புகள் வெடித்து ரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே இந்த கேஸை முடிக்க போலீசாருக்கு உதவியாக இருந்திருக்கிறது. இருப்பினும் எதற்காக இந்த கொலையை ஹரிணி செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை. ஹரிணியின் ஆண் நண்பர் தலைமறைவாகிவிட்டார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையை இருவரும் சேர்ந்து செய்தார்களா? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+