5 மாதத்துக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்.. பெங்களூரில் விழுந்த மழைத்துளி! ஹேப்பியான ஐடி சிட்டி
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 5 மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தான் இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூர்வாசிகள் ஹேப்பியாகி உள்ளதோடு bengalururains எனும் ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூர்.. இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் ஐடி சிட்டியில் காலநிலை மாற்றம் என்பது பெரிய தலைவலியாக மாறி உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெங்களூரில் கணிசமாக பெய்யும்.

ஆனால் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அதோடு கடந்த பிப்ரவரி மாதம் முதலே பெங்களூரில் வெயில் என்பது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மார்ச் மற்றும் நடப்பு மாதமான ஏப்ரலில் வெப்பம் இன்னும் அதிகரித்துள்ளதோடு நகரில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
பெங்களூரின் 3 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது? கர்நாடகாவில் 2 கட்டமாக தேர்தல் அறிவிப்பு
கோடை மழை இல்லாதது, கடும் வெப்பம் உள்ளிட்டவற்றால் போர்வெல்களில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் பொதுமக்கள் டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்களின் சொந்த ஊர்களுக்கு கூட படையெடுத்தனர். இத்தகைய சூழலில் தான் கோடை மழை பெய்யாவிட்டால் வரும் மே மாதத்தில் பெங்களூர் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகும் என்ற அச்சம் எழுந்தது.
ஏனென்றால் பெங்களூரில் கடந்த 5 மாதங்களாக மழை இல்லாத நிலை உள்ளது. இதுவரை பெங்களூர் இத்தகைய நிலையை கண்டது இல்லை. பெரும்பாலும் ஜனவரி தொடக்கம் அல்லது மார்ச், ஏப்ரலில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த முறை அப்படி மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் பெங்களூரில் வெயில் வாட்டி வதைத்ததோடு தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
‛‛பயண நேரம் மாற்றம்’’.. பெங்களூர் - சென்னை டபுள் டெக்கர் ரயில் பயணிகளே கவனம்.. மே 1 முதல் அமல்

இத்தகைய சூழலில் தான் தற்போது பெங்களூரில் மழைத்துளி விழ தொடங்கி உள்ளது. நேற்று பெங்களூரில் வடக்கு பகுதியாக உள்ள எலகங்காம மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இது வெப்பத்தை கிளப்பிவிட்டாலும் கூட கோடையில் பெய்த மழையால் தரையை போல் மக்கள் மனமும் குளிர்ந்துள்ளது.
பெங்களூருக்கு குட்பை சொல்லும் ஐடி ஊழியர்கள்? உண்மை என்ன? ஒன் இந்தியாவிடம் சொன்னது இதுதான்
அதேபோல் இன்றும் பெங்களூரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை பெய்தது. அதன்படி பிடிஎம் லே-அவுட் 4வது ஸ்டேஜ் உள்பட பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தற்போது எக்ஸ் பக்கத்தில் #bengalururains எனும் ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications