விஜய்க்கு கர்நாடகா சட்டசபையில் பாராட்டு.. அடுத்தடுத்து புகழ்ந்த பாஜக எம்எல்ஏக்கள்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தமிழக முதல்வர் விஜய்யை பாராட்டி பேசினார். விஜய்க்கு அரசியல் அனுபவம் குறைவு என்றாலும் கூட அவரை போல் கர்நாடகா அரசு செயல்படவில்லை. தமிழக முதல்வர் விஜய்யிடம் இருந்து கர்நாடகா பாடம் படிக்க வேண்டும் என்று கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் புகழ்ந்து பேசினர்.

bjp-mlas-praises-tamil-nadu-cm-vijay-in-karnataka-assembly

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் வரைவு அரசாணை பற்றியும், மாநிலத்தில் நிலவும் வறட்சி பற்றியும் விவாதிப்பதற்கான இந்த சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது.

முதலில் மேற்கு தொடர்ச்சி மலை விவகாரத்தில் மத்திய அரசின் வரைவு அரசாணை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த அரசாணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது வறட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடகா பாஜக எம்எல்ஏ சுனில் குமார் பாராட்டு தெரிவித்தார். முதல்வர் விஜய்யை புகழ்ந்து சட்டசபையில் பேசினார்.

அதேபோல் கர்நாடகா சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கும் பாஜகவின் அரவிந்த் பெல்லட் கூறுகையில், ''கர்நாடகா அரசும், முதல்வர் டிகே சிவக்குமாரும் மாநிலத்தின் நலனை காக்க தவறிவிட்டனர். காவிரி விஷயத்தில் மாநில நலனை பேணி விவசாயிகளுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை தமிழகத்திடம் இருந்து கர்நாடகா பாடம் கற்க வேண்டும். தமிழகத்துக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இது கர்நாடக அரசின் தோல்வியை காட்டுகிறது.

அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும், கர்நாடக முதலமைச்சரை போல் இல்லாமல் தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது மாநில விவசாயிகளின் நலன்களைக் காப்பதில் வெற்றி பெற்றுள்ளார். காவிரி அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி பாசன பகுதிகளில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே கர்நாடக முதலமைச்சர் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருந்தார்.

ஆனால் அதற்கு மாறாக இரு பருவ பயிர்களை சாகுபடி செய்ய தேவையான தண்ணீரை பெற்று தருவதாக தனது விவசாயிகளிடம் உறுதியளித்த விஜய், அதற்கான நீர் திறப்பையும் தொடங்கி வைத்தார். நீர் திறப்பில் ஏற்பட்ட தாமதத்திற்காக விவசாயிகளுக்கு ரூ.134 கோடி இழப்பீட்டையும் விஜய் வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி 18 மணிநேர மும்முனை மின்சாரத்தை விவசாயிகளுக்கு விஜய் வழங்கி வருகிறது. ஆனால் கர்நாடகா விவசாயிகளுக்கு ஒரு மணிநேரம் கூட இடையூறு இன்றி மும்முனை மின்சாரம் கிடைப்பது இல்லை'' என விளாசினார்.

அதேபோல் பாஜக எம்எல்ஏ சுனில் குமார் பேசுகையில், ''கர்நாடகத்தில் இருப்பது விவசாயிகளுக்கான அரசு இல்லை. ரியல் எஸ்டேட் அதிபர்களான அரசு. இந்த ஆண்டு எல்நினோவால் மழை பற்றாக்குறையாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்தது. இதனால் முன்கூட்டியே வறட்சியை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதனை செய்யவில்லை. விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. வறட்சி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு செய்யவில்லை. வறட்சி பட்டியலில் தங்களின் தொகுதிகளின் தாலுகாக்களை இணைக்க கோரி சில எம்எல்ஏக்கள் ராஜினாமா கொடுக்கிறார்கள்.

நடிகர் விஜய் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராக வந்துள்ளார். அவர் புதியவர். ஆனாலும் எல் - நினோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைத்து சிறப்பாக செயல்பட்டார். அந்த குழு 12 மாவட்டங்கள் எல் - நினோவால் பாதிக்கப்படும் என்று கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பிரந்துரை செய்தது. ஆனால் இந்த பணியை கர்நாடகா அரசு செய்யவில்லை. உங்களுக்கு (கர்நாடகா காங்கிரஸ் அரசு) அந்த எண்ணம் தோன்றாதது ஏன்?'' என விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+