Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு.. கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் கேட்டதாக குற்றம்சாட்டி காண்ட்ராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்த விவகாரத்தில் வழக்குப்பதியப்பட்ட நிலையில் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து வழங்கினார்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்ளார்.

இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டம் இண்டல்காவை சேர்ந்தவர் சந்தோஷ் கே பட்டீல். இவர் அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் முடித்தார். இதற்கு பணம் விடுவிக்கப்படவில்லை.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதனால் சந்தோஷ் கே பட்டீல் உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் விஷம் குடித்து சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார். முன்னதாக முடித்த அரசு பணிகளுக்கான பணம் விடுவிக்க அமைச்சர் ஈசுவரப்பா 40 சதவீதம் வரை கமிஷன் கேட்டதால் தற்கொலை செய்வதாக கூறியிருந்தார். அதனடிப்படையில் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஈஸ்வரப்பா நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கட்சி மேலிட உத்தரவுப்படி அவர் ராஜினாமா முடிவை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஈஸ்வரப்பா ராஜினாமா

ஈஸ்வரப்பா ராஜினாமா

அதன்படி அவர் இன்று சிவமொக்காவில் இருந்து ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக ஈஸ்வரப்பா பெங்களூர் வந்தார். அங்கு முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவருடன் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் இருந்தனர்.

 நிரபராதியாக வருவேன்

நிரபராதியாக வருவேன்

முன்னதாக, ஈஸ்வரப்பா கூறும்போது, ‛‛என்னால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. என்மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதனால் விசாரணை முடிவில் நான் நிரபராதி என்பது தெரியவரும்'' என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதேபோல் தான் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், ஈஸ்வரப்பா மீது போலி குற்றச்சாட்டு சுமர்த்தப்பட்டுள்ளது. அவர் விரைவில் நிரபராதி என்பது தெரியவரும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+