ஹால் டிக்கெட்டில் சிரித்த ’சன்னி லியோன்’! ஆசிரியர் தேர்வில் அதிர்ந்து போன அதிகாரிகள்! என்ன நடந்தது?
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவியின் ஹால் டிக்கெட்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் பிறந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன் முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இந்தியா வந்தவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது பாலிவுட் அல்லாமல் கோலிவுட், மாலிவுட், டோலிவுட் என அனைத்து வுட்டுகளிலும் கலக்கி வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சன்னிலியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

சன்னி லியோன்
இந்த நிலையில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சர்ச்சையால் இந்தியா முழுவதும் மீண்டும் விவாத பொருளாகி இருக்கிறார் சன்னி லியோன். என்னவென்றால் கர்நாடக மாநிலத்தில் ஒரு மாணவிக்கு தேர்வுக்காக வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் மாணவியின் படத்திற்கு பதிலாக சன்னி லியோனின் படம் இடம்பெற்று இருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹால் டிக்கெட்டில் சர்ச்சை
கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவி ஒருவருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த ஹால் டிக்கெட்டில் தனது புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இதனை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

உண்மை என்ன?
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளரான பி.ஆர் நாயுடு கல்வித்துறை அதிகாரிகளை ஆபாசப்பட நடிகையின் புகைப்படத்தை பிரிண்ட் செய்ததற்காக விமர்சித்திருக்கிறார். இதையடுத்து கர்நாடகாவில் இந்த விவகாரம் புயலைக் கிளப்பிய நிலையில் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பதிவு செய்யும் புகைப்படங்களையே தானாக சிஸ்டம் அப்டேட் செய்து பிரிண்ட் எடுத்து தரும் என கூறியுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு
இது முழுக்க முழுக்க மாணவியின் தவறு என விளக்கம் அளித்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கர்நாடக மாநில காவல் கல்வித்துறை விளக்கம் அளித்து இருக்கிறது. விசாரணையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க அந்த மாணவியின் கணவரின் நண்பர் உதவியதாகவும் அவர் தவறுதலாக சன்னி லியோனின் புகைப்படத்தை அப்லோடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வேண்டுமென்றே அவர் இவ்வாறு செய்தாரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications