பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென கட்டுப்பாடு அதிகரிப்பு.. எடியூரப்பா அதிரடி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் கொரோனா பரவல் தீவிரம் எடுத்துள்ளதால், அங்கு கே ஆர் மார்க்கெட், சித்த புரா, சிக்பேட், சமராஜபெட், கலாசிபாலையா ஆகிய பகுதிகள் மொத்தமாக லாக்டவுன் செய்யப்படுகிறது.

Recommended Video

    அசத்திய Bangalore... கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி?

    கர்நாடகாவில் தற்போது திடீர் என்று கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் 9150 கேஸ்கள் உள்ளது. அங்கு மொத்தம் 137 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதில் பெங்களூரில் மட்டும் மொத்தம் 1279 கேஸ்கள் வந்துள்ளது.பெங்களூரில் மொத்தம் 64 பேர் பலியாகி உள்ளனர்.

    Coronavirus: Lockdown imposed in many areas as the rise in cases in Bangalore

    இன்று மட்டும் பெங்களூரில் மொத்தம் 196 கேஸ்கள் வந்துள்ளது. இதனால் பெங்களூரில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு மாநில முதல்வர் எடியூரப்பா முக்கிய மீட்டிங் நடத்தினார். துணை முதல்வர், தலைமைச் செயலாளர், மேயர், ஆட்சியர் என்று பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய எடியூரப்பா பின் வரும் விஷயங்களை தெரிவித்தார். அதில், பெங்களூரில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து சரியாக முறையாக விதிகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். முழுக்க முழுக்க அரசின் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

    மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000 மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000

    கிளஸ்டர் பரவல் இருக்கும் இடங்களில், அதிக கட்டுப்பாடுகளுடன் லாக்டவுனை அமலில் வைத்து இருக்க வேண்டும். முக்கியமாக கே. ஆர் மார்கெட், சித்தபுரா, வி வி புரம், கலாசிபாலையா ஆகிய இடங்களில் கடுமையான லாக்டவுனை கொண்டு வர வேண்டும். இதற்கு அருகில் இருக்கும் தெருக்களை மொத்தமாக மூட வேண்டும்.

    அதன்படி கே ஆர் மார்க்கெட், சித்த புரா, சிக்பேட், சமராஜபெட், கலாசிபாலையா மொத்தமாக லாக்டவுன் செய்யப்படுகிறது. லாக்டவுன் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது எப்ஐஆர் பதியப்படும். அதேபோல் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து வார்டுகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும். ஹோட்டல்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்தை பராமரிக்க போதிய வசதி வழங்கப்படும். அதேபோல் பிற அடிப்படை வசதிகளை வழங்கவும் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்.

    பெங்களூரில் வர்த்தக பணிகளை நிறுத்தாமல் கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும். பெங்களூரில் காண்டாக்ட் டிரேசிங் பணிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். வார் ரூம் அதிகாரிகள் மூலம் மருத்துவமனைகளில் இருக்கும் பெட்களின் எண்ணிக்கை கண்காணிக்கப்படும். உடனுக்குடன் இந்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டு, மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    English summary
    Coronavirus: Lockdown imposed in many areas as the rise in cases in Bangalore suddenly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X