கை,கால் கட்டி வாயில் டேப் ஒட்டி 82 வயது மூதாட்டி கொலை வழக்கு.. 3 பேரை பிடித்துக் கொடுத்த "கோஹ்லி"
பெங்களூர்: பெங்களூரில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் 3 பேரை கைது செய்ய காரணமாக அமைந்த கிங் கோலி என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர மகாலட்சுமிபுரத்தில் வசிக்கும் கமலா என் ராவ் எனும் கமலம்மா. அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் டேப் அடிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த மரணம் மே 27 ஆம் தேதி நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். விசாரணையில் சித்தராஜு, அசோக் மற்றும் அஞ்சனமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் அசோக் பிளம்பங் வேலை செய்து வருகிறார்.
இந்த அசோக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கமலா வீட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டிக்கு நிறைய நகை, பணம் இருப்பதையும் வசதியாக வாழ்வதையும் அசோக் கண்டறிந்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் என்பதை பந்தயம் கட்ட கடன் வாங்கியதாக தெரிகிறது.
அசோக்கின் நண்பர்கள்தான் இந்த அஞ்சனமூர்த்தியும் சித்தராஜுவும் பந்தயம் கட்ட ரூ 7 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தனர். இந்த கடன் கழுத்தை நெரித்ததால் பணத்திற்கு என்ன செய்வது என யோசித்த இவர்களுக்கு அசோக்தான் ஐடியா கொடுத்துள்ளார். மூதாட்டி தனியாக இருக்கிறார். அவர் வீட்டில் கொள்ளையடித்து கடனை அடைக்கலாம் என்று!
இதற்கு மற்ற இருவரும் ஓகே சொல்லியுள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கமலாவிடம் உள்ள வணிக இடத்தை வாடகைக்கு கேட்பதாக கூறி ஆட்டோவில் இவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அறிந்தனர். இதையடுத்து மூவரும் திரும்பி வந்துவிட்டனர்.
இதையடுத்து இரண்டாவது முயற்சியாக சித்தராஜுவும் அஞ்சனமூர்த்தியும் ஆட்டோவில் கமலாவின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அசோக்கை கமலாம்மாளுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் அவர் வெளியே காத்திருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த சித்தராஜுவுக்கும் அஞ்சனமூர்த்திக்கும் கமலாம்மாள் பிஸ்கெட் சாப்பிட கொடுத்துள்ளார்.
அப்போது மூதாட்டியை படுக்கையறைக்கு இழுத்து சென்று கை, கால்களை கட்டியுள்ளனர். மேலும் மூதாட்டி சப்தம் போடாமல் இருக்க வாயில் டேப் ஒட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இந்த நிலையில் மூவரும் வந்து சென்ற காட்சிகள் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

ஆனால் இவர்களது முதல் முயற்சியிலேயே ஆட்டோவில் இருந்த நம்பர் பிளேட்டை கழற்றி வைத்துள்ளனர். ஆனால் அந்த ஆட்டோவின் பின்னால் கிங் கோலி என எழுதப்பட்டிருந்ததை மறைக்க மறந்துவிட்டனர். பொதுவாக தவறு செய்பவர்கள் ஏதாவது ஒரு ஆதாரத்தை விட்டுச் செல்வார்கள் என சட்டம் சொல்லும் நிலையில் அது கிங் கோலி என்ற தடயமாக இருந்தது.
இதையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 3 பேரையும் மைசூரில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் மூதாட்டி வீட்டில் திருடிய நகைகளை விற்று கடனை அடைத்துவிட்டதாக மூவரும் தெரிவித்தனர்.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications