பூமியை மட்டுமல்ல.. நிலவையும் விட்டு வைக்காத கொரோனா.. லாக் டவுனால் ஏற்பட்ட தாக்கம்! ஆச்சரியமா இருக்கே
பெங்களூர்: கொரோனா ஊரடங்கால் பூமிக்கு மட்டுமல்லாமல் நிலவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அதிகம் இருந்த லாக் டவுன் காலக்கட்டத்தில் நிலவின் பூமியை நோக்கிய மேற்பரப்பில் வெப்பநிலை -250 டிகிரி வரை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் கொடிய பெருந்தொற்று நோய் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த 2022 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாடுகள் நீடித்தன. இதில், தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020 - 21 கால கட்டத்தில் கடுமையான லாக்வுடன் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் விதிக்கப்பட்டு இருந்தது.

வீடுகளை விட்டு வெளியேற தடை, போக்குவரத்துக்கு தடை, அத்தியாவசிய தேவைகளை தவிர இதர பணிகளுக்கு வீட்டை விட்டு கூட வெளியே வரக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்தக் கட்டுப்பாடுகளால் உலக அளவில் கடும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. லாக் டவுனால் பூமியில் வாழும் மக்களுக்குதான் பாதிப்பு என்று நினைத்தால் அது தவறாகத்தான் இருந்து இருக்கும் போல..
லாக்டவுனின் தாக்கம் சந்திரன் (நிலவு) வரை ஏற்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் இந்த வியக்க வைக்கும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் வெப்ப நிலை -250 டிகிரி வரை குறைந்துள்ளதாம்.. இதற்கு பூமியில் மனித செயல்பாடுகள் கணிசமாக குறைந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குறிப்பாக பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் குறைந்தது ஆகியவை நிலவின் வெப்பநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நாசாவின் ஆர்பிட்டர் தரவுகளைப் பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்த
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (பிஆர்எல்) விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.
கே துர்கா பிரசாத் மற்றும் ஜி அம்பிலி ஆகியோர் இந்த அறிவியல் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நிலவின் இரண்டு இடங்களில் உள்ள ஆறு பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை குறித்து நாங்கள் ஆய்வு செய்து வந்தோம். 12 ஆண்டுகளின் தரவுகளை முதலில் நாங்கள் ஆய்வு செய்தோம். ஆனால் 2017 - 2023 ஆம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகள் வரையிலான வெப்ப நிலை ஆய்வு செய்யப்பட்டது.
லாக்டவுனுக்கு மூன்று ஆண்டுகள் முன்பும், லாக்டவுனுக்கு மூன்று ஆண்டுகள் பிறகு என ஆய்வு மேற்கொண்டதில் கடுமையான லாக்டவுன் இருந்த கால கட்டத்தில் நிலவின் வெப்பநிலையில் பெரிய மாறுபாடு இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது நிலவின் வெப்ப நிலை 8 முதல் 10 கெல்வின் வரை குறைந்துள்ளது. சூரிய காந்த புயல்கள் மற்றும் இதர விண்வெளி மாறுபாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிலவின் வெப்ப மாறுதலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
எனவே மனிதனின் செயல்பாடுகளுக்கும் நிலவில் வெப்பம் குறைந்திருப்பதற்கும் நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது நிலவின் பூமியை நோக்கியுள்ள பக்கத்தில் மட்டும் வெப்பநிலை குறைந்திருக்கிறது. நிலவானது பூமியில் இருந்து சுமார் 384,403 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நிலவின் சராசரி வெப்பநிலையானது சூரிய ஒளி படும் போது பகல் நேரத்தில் குறைந்தது 170 கெல்வின் முதல் 390 கெல்வின் வரை இருக்கும். அதாவது அதிகபட்சமாக 250 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இரவு நேரத்தில் நிலவானது குளிர்ந்து மைனஸ் 208 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இந்த நிலையில் தான் கொரோனா காலக்கட்டத்தில் நிலவின் வெப்பநிலை - 250 டிகிரி பாரன்ஹீட் வரை குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications