5 முறை அடுத்தடுத்து அதிர்ந்த பூமி.. நில நடுக்கம் என மக்கள் பீதி.. பெங்களூர் அருகே பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிக்பல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவில் நான்கு முறை என மொத்தமாக 5 முறை நிலநடுக்கத்தை கிராம மக்கள் உணர்ந்ததால் பீதியடைந்துள்ளனர்.
கர்நாடகாவில், பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ளது சிக்பல்லாப்பூர் மாவட்டம்.
இங்குள்ள, சிந்தாமணி, மிட்டஹள்ளி, அப்சனஹள்ளி,கொடகன்லு ஆகிய கிராமங்களில் நேற்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.
கடலூர்-நாகை-தஞ்சை-திருவாரூர் 5 மாவட்டங்களில் ஒரே நாளில் ஆய்வு; முதலமைச்சரின் பயண விவரம் இதோ!

பாத்திரங்கள்
வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை உருண்டோடின. இந்த நிலையில் நேற்றிரவு 8 மணி, 11 விடியற்காலை 4 மணி, 5மணிக்கும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் தங்காமல் பொதுவெளியில், வீடுகளுக்கு முன்பாக காத்து கிடந்தனர்.

கலெக்டர் விசிட்
இதையடுத்து, சிக்பள்ளாப்பூர் கலெக்டர் ஆர்.லதா, போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன் குமார் ஆகியோர், புவியியலாளர் குழுவுடன் அங்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் நேரில் சென்று விவரம் கேட்டறிந்தனர்.

பூகம்பம் இல்லை
லதா கூறுகையில், மிட்டஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பீதியடையத் தேவையில்லை, ஏனெனில் இது பூகம்பம் இல்லை. அவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றார். கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தில் (கேஎஸ்என்டிஎம்சி) ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் பற்றி எதுவும் பதிவாகவில்லை.

என்ன ஒலி
இருப்பினும், புவியியலாளர்கள் குழு ஒன்று அந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டது, அங்கு அவர்கள் ஒரு வார காலத்திற்கு அது என்ன ஒலி என்பதை கண்காணிப்பதற்காக முகாமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்டஹள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், மூன்று அல்லது நான்கு முறை பெரிய ஒலி மற்றும் அதிர்வு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் பீதிக்கு ஆளாகினர். ஆனால், கிராமத்திற்கு உயர் அதிகாரிகள் வந்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

மக்கள் பயம்
ஏதோ தவறு நடக்குமோ என்ற பயத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தோம் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த நீலம்மா என்பவர் தெரிவித்தார். ஆனால் கட்டிடத்தில் விரிசல் ஏதும் ஏற்படவில்லை, மின்கசிவு அல்லது பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் இந்த சத்தம் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. லேசான நில நடுக்கம் என்பதால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று பொது மக்கள் நினைக்கிறார்கள். நில நடுக்கம் இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள்.