கட்டிப்பிடித்து - முத்தமிட்டு ஆடைகளை கழற்ற முயன்ற டாக்டர்.. பரிசோதனைக்கு போன பெண்ணுக்கு டார்ச்சர்
பெங்களூர்: பெங்களூரில் தோல் அலற்சியால் பாதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் பரிசோதனைக்கு சென்றார். அப்போது பரிசோதனை என்ற பெயரில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ஆடைகளை கழற்ற முயன்ற பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூர் அசோக் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிளினிக் நடத்தி வருபவர் பிரவீன். இவருக்கு வயது 56. இவர் தோல் நோய் நிபுணர். இந்நிலையில் தான் பெங்களூரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தோல் அலற்சியால் பாதிக்கப்பட்டார்.

நாளுக்கு நாள் இந்த தோல் அலற்சி அதிகரித்தது. இதனால் இளம்பெண் கடும் அவதியை எதிர்கொண்டார். இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த 17 ம் தேதி கிளினிக்கிற்கு தனியாக சென்றார். குடும்பத்தினர் யாரும் உடன் செல்லவில்லை.
இளம்பெண்ணை தனது அறைக்கு அழைத்த பிரவீன், தவறாக நடந்து கொண்டார். பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்ணிடம் பேசுவது போல் அவரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு உல்லாசமாக இருக்க ஹோட்டலுக்கும் அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அவரை தள்ளிவிட்டு வெளியேறி தப்பித்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீருடன் தனது பெற்றோரிடம் சம்பவம் பற்றி கூறினார். இதையடுத்து அவர்களின் அறிவுரைப்படி இளம்பெண் பெங்களூர் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் டாக்டர் பிரவீன் மீது அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இளம்பெண் அளித்துள்ள புகாரில் கூறியதாவது: ‛‛தோல் அலற்சியால் நான் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அவர் என்னிடம் அரை மணிநேரம் பேசினார். பிறகு என்னை கட்டிப்பிடித்தார். தொடக்கூடாத இடங்களை தொட்டார். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. சில முறை முத்தங்கள் கொடுத்தார்.
பரிசோதனை என்ற பெயரில் என் ஆடைகளை கழற்ற முயன்றார். நான் கடும் கோபமடைந்தேன். அப்போது எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஹோட்டலுக்கு வந்து ஆசையை நிறைவேற்றுங்கள் என்று தவறாக பேசினார். பொதுவாக நான் எனது தந்தையுடன் தான் மருத்துவமனை, கிளினிக்கிற்கு செல்வேன்.
ஆனால் அன்றைய தினம் எனது தந்தைக்கு வேலை இருந்தது. இதனால் நான் மட்டும் தனியாக சென்றேன். அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு டாக்டர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்'' என கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் டாக்டர் பிரவீனை அதிரடியாக கைது செய்தனர்.
டாக்டர் பிரவீன் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 75 (பாலியல் தொல்லை) மற்றும் சட்டப்பிரிவு 79 (வார்த்தை மற்றும் செயல் மூலமாக பெண்ணை மானபங்கம் செய்தல்) உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications