இன்ஃபோசிஸில் சேர்ந்த மாஜி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்? டிரெண்டாகும் போட்டோ! பின்னணி என்ன பாருங்க
பெங்களூர்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் திடீரென பெங்களூரில் உள்ள காபி ஷாப் ஒன்றுக்கு விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான போட்டோ, வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பல வித கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக். கடந்த 2022 முதல் 2024ம் ஆண்டு வரை பிரிட்டன் பிரதமராக இருந்தவர் ரிஷி சுனக். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இந்தியாவைச் சேர்ந்தவர்.

அக்ஷதா மூர்த்தி வேறு யாரும் இல்லை.. இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள்தான். ரிஷி- சுனக்- அக்ஷதா திருமணம் கூட பெங்களூரில் தான் நடந்தது.
காபி ஷாப்: சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் ஆட்சியை இழந்த நிலையில், அவர் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் பெங்களூரில் உள்ள தேர்ட் வேவ் காபி ஷாப்பிற்கு விசிட் அடித்துள்ளார்.. கவுண்டரில் அவர்கள் ஆர்டர் செய்துவிட்டு, அங்கு ரிலாக்ஸாக நேரத்தைச் செலவிட்டுள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.

ரிஷி சுனக் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட் என சிம்பிளாகவே இருந்தார். அக்ஷதா மூர்த்தி வழக்கம் போல ஸ்டைலான வெள்ளை கலர் ஆடை அணிந்திருந்தார். இருவருமே தங்கள் துறையில் பிஸியாக இருக்கும் நிலையில், பொது வெளியில் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.
நெட்டிசன்கள்: இந்தச் சூழலில் இருவரும் ஒன்றாக பெங்களூரில் உள்ள காபி ஷாப்பிற்கு சென்றுள்ளது பலரரையும் கவனிக்க வைத்துள்ளது. இந்த தம்பதியின் போட்டோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது குறித்து நெட்டிசன்கள் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். பலரும் காமெடியான கருத்துகளைப் பதிவிட்டு கின்டலடித்து வருகிறார்கள்.

இன்போசிஸ்: ரிஷி சுனக் தனது மாமனாரின் நிறுவனமான இன்ஃபோசிஸில் இணைந்துவிட்டதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்திய இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியது டிரெண்டாகி இருந்த நிலையில், அதைக் குறிப்பிட்டும் ரிஷி சுனக் இனி இன்ஃபோசிஸில் 70 மணிநேரம் வேலை செய்யப் போகிறார் என்று நெட்டிசன்கள் நக்கலடித்து வருகிறார்கள்.
முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை பார்த்ததும் பெங்களூர்வாசிகள் ஷாக் ஆகினர். பலரும் ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதியுடன் செல்ஃபிக்களையும் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக பெங்களூர் ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்கு தனது மனைவியுடன் சென்ற ரிஷி சுனக் அங்கு வழிபாடு நடத்தினார். ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி அங்கு நடந்த சடங்குகளில் சிறப்புப் பூஜைகளிலும் கலந்து கொண்டனர்.
ரிஷி சுனக் பின்னணி: கடந்த 2022 முதல் 2024 வரை பிரிட்டன் நாட்டின் அதிபராக இருந்தவர் ரிஷி சுனக்.. பிரிட்டன் நாட்டின் இளம் பிரதமர் என்ற சாதனையைப் படைத்த ரிஷி சுனக், அப்பதவிக்கு வரும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர். மேலும், பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்த முதல் இந்துவும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமர் என்ற முறையில் அவர் கடந்தாண்டு இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். இதற்காகத் தனது மனைவியுடன் வந்த ரிஷி சுனக், மாநாட்டிற்கு முன்பு டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்திருந்தார். ரிஷி சுனக் எப்போதும் இந்து சடங்குகள் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவராகவே அறியப்படுகிறார். பிரிட்டனில் நடந்த தேர்தலுக்கு முன்பு கூட அவர் கோ வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications