விபத்தில் சட்டென தீப்பிடித்த பஸ்! காப்பாற்றும்படி கதறிய 7 பேர் உடல் கருகி பலி! கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கேவாவில் இருந்து கர்நாடகம் வழியாக ஐதரபாத் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் இன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் காப்பாற்றும்படி கதறிய 7 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்த நிலையில் 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவாவில் இருந்து கர்நாடகம் வழியாக ஐ தரபாத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றனர். இதேபோல் நேற்று இரவு கோவாவில் இருந்து தனியார் பஸ் ஐதராபாத் புறப்பட்டது.
பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இன்று காலை கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் கமலாபுரா டவுன் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

விபத்தில் தீப்பிடித்த பஸ்
அப்போது திடீரென்று பஸ்சும், சரக்குவாகனமும் மோதிக்கொண்டன. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் அடுத்த நொடி பஸ் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர். பஸ் கவிழ்ந்து தீப்பற்றியதால் அவர்களால் எளிதில் வெளியே வரமுடியவில்லை.

தீயில் சிக்கி 7 பேர்
இதனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு காயங்களுடன் ஏராளமானவர்கள் வெளியேறினர். ஆனால் 7 பேர் தீயில் சிக்கினர்.இவர்களால் பஸ்சில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர்கள் உயிருடன் தீயில் கருகி எரிந்தனர். காப்பாற்றும்படி அவர்கள் அலறினர். இதையடுத்து சகபயணிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பஸ்சில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

உடல் கருகி இறந்த 7 பேர்
இதனால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எலும்புக்கூடாக காட்சியளித்த பஸ்சில் 7 பேர் உடல் கருகி இருந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. உடல்கள் முற்றிலுமாக எரிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. இதனால் இறந்தவர்களின் பெயர், விபரங்கள் தெரியவில்லை. உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிர் தப்பிய 22 பேர்
இதுபற்றி போலீசார் விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில் தீப்பற்றி எரிந்த பஸ்சானது கோவாவில் இருந்து கலபுரகி மாவட்டம் வழியாக ஐ தரபாத் நோக்கி சென்ற நிலையில விபத்தில் சிக்கி தீப்பிடித்தது தெரியவந்தது மேலும் பஸ்சில் மொத்தம் 29 பயணிகள் இருந்த நிலையில் 22 பேர் உயிர் தப்பிய நிலையில் 7 பேர் இறந்ததாக போலீசார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications