பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லோருக்கும் ரூல்ஸ் ஒன்னுதான்! மதத்தை காட்ட ஸ்கூல் இடம் கிடையாது! ஹிஜாப் பற்றி குஷ்பு பரபர கருத்து

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் பியு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டு இருக்கும் தடை குறித்து பாஜக உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியு கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஹிஜாப் விவகாரம்: முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்.. மலாலா ஆவேசம்!ஹிஜாப் விவகாரம்: முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்.. மலாலா ஆவேசம்!

ஹிஜாப்

ஹிஜாப்

இந்த ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகள் வைக்கும் கருத்து, நாங்கள் பல வருடங்களாக இப்படித்தான் வகுப்பிற்கு வருகிறோம். அப்போதெல்லாம் இதை யாரும் பிரச்சனையாக்கவில்லை. அப்போது ஹிஜாப் அணிவது இவர்களுக்கு பிரச்சனையாக இல்லை. இப்போது திடீரென ஹிஜாப் அணிய கூடாது என்று சில இந்துத்துவா மாணவர்கள் போராடுகிறார்கள். இவர்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். ஹிஜாப் எங்கள் உரிமை. அது எங்கள் மத அடையாளம் என்று மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

அதே சமயம் மாணவிகளுக்கு எதிராக போராடும் இந்துத்துவா மாணவர்கள், பள்ளி என்பது மதத்தை வெளிக்காட்டும் இடம் கிடையாது. மதத்தை காட்ட வேண்டும் என்றால் வெளியே காட்டுங்கள். அல்லது வீட்டிற்குள் இருங்கள். அதைவிட்டு ஹிஜாப்போடு பள்ளிக்கு வர கூடாது. எல்லோருக்கும் யூனிபார்ம் கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் விதி ஒன்றுதான். அதை அணிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வர வேண்டும். அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என்று இந்துத்துவா மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி குஷ்பு இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், கல்வி என்பது மதத்தை பற்றியது கிடையாது. கல்வி என்பது சமத்துவம் பற்றியது. பள்ளிக்கு யூனிபார்ம் அணிந்து செல்ல வேண்டும். ரூல்ஸ் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கல்வி மையங்கள் என்பது உங்கள் மதத்தை காட்டும் இடம் கிடையாது.

குஷ்பு கருத்து

குஷ்பு கருத்து

மாறாக கல்விக்கூடம் என்பது ஒரு இந்தியராக நீங்கள் வலிமையாக காட்ட வேண்டிய இடம். இதை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் அவமானகரமானவர்கள், என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். அதாவது வகுப்பிற்கு யூனிபார்ம் அணிந்து செல்ல வேண்டும் என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில், பள்ளக்கு ஒரே மாதிரியான சீருடையுடன் வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லா மாணவர்களும் யூனிபார்ம் மட்டுமே போட வேண்டும். வேறு உடைகளை அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Hijab in PU colleges row: BJP Kushbhu Sundar supports uniform for all students.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X