ஹிஜாப் விவகாரம்: அல்கொய்தா தலைவர் வீடியோ வெளியீடு! அடக்குமுறைக்கு எதிராக போராட வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அடக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும் எனக்கூறிய அவர் ‛அல்லாஹு அக்பர்' கோஷமிட்ட மாணவியை பாராட்டினார்.

கர்நாடக பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன. சில கல்லூரிகளில் காவிஷால் அணிந்து ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கர்நாடக கல்வி நிறுவனங்கள் சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவி முஸ்கான்

மாணவி முஸ்கான்

முன்னதாக பிப்ரவரி மாதம் 8 ம் தேதி மண்டியாவி்ல உள்ள தனியார் கல்லூரியில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது முஸ்கான் என்ற மாணவி முன்பு ‛ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிடப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனது கையை உயர்த்தி ‛அல்லாஹு அக்பர்' என பதில் கோஷமிட்டபடி நடந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அல்கொய்தா தலைவர் வீடியோ

அல்கொய்தா தலைவர் வீடியோ

இந்நிலையில் தான் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கர்நாடகத்தில் நிலவும் ஹிஜாப் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஷபாப் ஊடகத்தால் 9 நிமிட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு

மேலும் ‛அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட மாணவி முஸ்கானை அவர் பாராட்டினார். ‛இந்தியாவின் உன்னத பெண்' என எழுதப்பட்ட ஒரு போஸ்டருடன் அவர் கவிதை நடையில் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த பெண் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இதை பார்த்து தான் அவரது துணிவு குறித்து அறிந்து உருகினேன். இதனால் தான் கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.

யார் இந்த அய்மன் அல் ஜவாஹிரி

யார் இந்த அய்மன் அல் ஜவாஹிரி

ஒசாமா பின்லேடன் மறைவுக்கு பிறகு அல்கொய்தா தலைவராக அய்மன் அல் ஜவாஹிரி பொறுப்பேற்று கொண்டார். இவர் இறந்துபோனதாக 2020ல் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் இறக்கவில்லை. அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். கடைசியாக 2021 நவம்பரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இஸ்லாமுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இருப்பதாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பிறகு தற்போது தான் வீடியோ வெளியிட்டுள்ளார். தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள இவர் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+