காந்தாரா காரணம்.. உருவான பிணைப்பு.. குலதெய்வம் கோவில்களுக்கு குடும்பத்தோடு கிளம்பி செல்லும் மக்கள்!
பெங்களூர்: கன்னடத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படத்தின் மகத்தான வெற்றியின் தாக்கத்தின் காரணமாக பலரும் தங்களது பிறந்த ஊர்களுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வருவதாக கன்னட மீடியாக்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பணி நிமித்தம் மற்றும் தொழில் நிமித்தும் காரணமாக கிராமப்புற மக்கள் பலரும் நகர்புறங்களுக்கு வந்து அங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழ தொடங்கி விட்டனர். இதன் காரணமாக கிராமங்களுக்கு கோவில் திருவிழாக்களுக்கு மட்டும் செல்லும் நிலை உள்ளது.
அதுவும் 2கே கிட்ஸ் கிராமங்களுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள், அவர்களுக்கு கிராம சூழ்நிலை சொகுசாக இல்லை என்பது போன்ற விமர்சனங்களும் உண்டு. இந்த நிலையில்தான் காந்தாரா வெற்றிக்கு பிறகு பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று குலதெய்வங்களை தரிசனம் செய்து வருகின்றனர் என்று பிரபல கன்னட மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

புது சாதனை
காந்தாரா திரைப்படத்தில் துளு நாடு அதாவது மங்களூர், உடுப்பி போன்ற தெற்கு கர்நாடக கடலோர பகுதிகளில் வழிபடக்கூடிய கிராமப்புற தெய்வ வழிபாடு காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இதுவரை வெளியான கன்னட திரைப்படங்களிலேயே அதிகப்படியாக ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவைத்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே அறிவித்துள்ளது. இதுவரை கேஜிஎஃப் 2 கன்னட திரைப்படம் அந்த பெருமையை பெற்றிருந்தது. காந்தாரா திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் அந்த படத்தையும் தயாரித்து இருந்தது. அதே நிறுவனம்தான் இன்று கேஜிஎப் சாதனை உடைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

குலதெய்வம் கோவில்களுக்கு செல்லும் மக்கள்
காந்தாரா திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு தங்களது முன்னோர்கள் வழிபாட்டுடன் இந்த திரைப்பட கதையை பொருத்திப் பார்த்து மக்கள் சிலாகிதம் அடைந்தது காரணம் என்று கூறப்படுகிறது. எனவே இயல்பாகவே தங்களது சொந்த ஊர்களில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் பொங்கி படையலிட்டு வழிபாடு நடத்துவது அதிகரித்துள்ளது. இந்த தீபாவளி விடுமுறையை தங்களது சொந்த ஊரில் குலதெய்வ வழிபாட்டுடன் பலரும் செலவிட்டதாக கன்னட மீடியாக்கள் கூறுகின்றன. இந்த திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியாகி இருப்பதால், அதைப்பார்த்த பிறகு தங்கள் குலதெய்வம் மீது அதிகப்பற்று வந்துவிட்டதாக தமிழ் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறுவதை பார்க்க முடிகிறது.

ஹவுஸ் ஃபுல் காட்சிகள்
காந்தாரா திரைப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தாலும் இப்போதும் கர்நாடகாவில் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில்கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. தீபாவளிக்கு தமிழில் வெளியான பிரின்ஸ், சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியான பெங்களூர் தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருக்கின்றன. ஆனால் ஒரு மாதம் ஆகியும் காந்தாரா திரைப்படம் ஓடக்கூடிய திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் குலதெய்வம் மற்றும் தங்களது சொந்த ஊர் போன்றவற்றின் மீதான மக்களின் ஆத்மார்த்த பிணைப்புதான் என்று கூறப்படுகிறது.

குலதெய்வ பிணைப்பு
மண்ணில் மக்களுடன் அந்த தெய்வங்கள் என்றும் பிணைப்பை விடுவது கிடையாது என்பதற்கு பல உதாரணங்கள் இருப்பதாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு சென்றதும் மிகப்பெரிய ஆங்கார ஓசையுடன் ஒரு இளம் பெண் சாமியாடியதையும், அவர்கள் குலம் குலமாக அம்மன் தெய்வம் ஒன்றை வணங்கி வந்த இடம் அது என்பது பலருக்கும் பிறகு தெரிய வந்ததாகவும் தெரிவித்திருந்தார். காந்தாரா திரைப்படத்திலும் கதாநாயகன் எப்படி தங்கள் குலதெய்வத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பது கிளைமாக்ஸ் காட்சியில் தத்ரூபமாக காட்டப்பட்டு இருக்கும். பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த பிணைப்பு வந்துவிட்டதுதான் அவர்கள் தங்கள் குலதெய்வம் கோயில்களுக்கு சாரை சாரையாக செல்வதை எடுத்துக்காட்டுகிறது என்கின்றன கன்னட மீடியாக்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications