பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாலை பிடித்து இழுத்த நபர்.. அப்படியே 14 அடி உயரத்திற்கு வெளியே வந்த ராஜநாகம்.. ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

பெங்களூரு : ஏதோ ஒரு சின்ன பாம்பு பாத்ரூமிற்குள் நுழைந்துவிட்டதாக கருதி வாலை பிடித்து வெளியே இழுத்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர் வாலை பிடித்து இழுத்தது ஆள் அடி உயரமுள்ள ராஜநாகத்தை.. கோபத்தில் பாய்ந்து கொத்த முயன்ற பாம்பிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.

உண்மையில் அந்த ராஜநாகம் மிரட்டவே அப்படி செய்திருக்கிறது. கொத்த வேண்டும் எனறு கோபத்துடன் கொத்தியிருந்தால் அந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை.

ஏனெனில் ராஜநாகம் கடித்தால் உயிர் பிழைப்பது எளிதானது அல்ல. அதேநேரம் எந்த ராஜநாகமும் அவ்வளவு எளிதில் மற்ற பாம்புகளை போல் மனிதர்களை தாக்காது. மிகவும் அமைதியான குணம் கொண்ட அதேநேரம் மிக மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ராஜநாகம் ஆகும்.

யார் இந்த முல்லா முகமது ஹசன்.. ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவர்.. பின்னணி யார் இந்த முல்லா முகமது ஹசன்.. ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவர்.. பின்னணி

பாம்பு

பாம்பு

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். எந்த பாம்பாக இருந்தாலும் பயந்து ஓடுபவர்களே அதிகம். ஆனாலும் சிலர் மட்டும் கொடிய விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் அசால்டாக பிடிப்பார்கள். அவர்கள் தான் பாம்பு பிடிக்கும் கலை தெரிந்தவர்கள் ஆவர். பாம்பு பிடிக்கும் கலையில் சிறந்து விளங்குபவர்களே சில சமயங்களில் கொத்து வாங்கி உயிரிழப்பதும் உண்டு. ஏனெனில் கொஞ்சம் பிசிறினாலும் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும் அபாயகரமான உயிரினம் பாம்பு.

14 அடி ராஜநாகம்

14 அடி ராஜநாகம்

கர்நாடகா மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், வீட்டின் குளியலறை ஒன்றில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை பிடிக்க சென்ற பாம்பு பிடிக்கும் இளைஞர், சிறிய நாகம் என்று நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது 14 அடி உயர ராஜநாகம் வெளியே வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

உயிர் தப்பினார்

உயிர் தப்பினார்

ஆள் உயரத்திற்கு வெளியே வந்த நாஜநாகத்தை பார்த்த, பாம்பு பிடிக்கும் அந்த நபர் அப்படியே ஆடிபோய் விட்டார். பயத்தில் அவர் கையில் வைத்திருந்த குச்சியை தூக்கி எறிந்தார். இந்க காட்சிகள் அனைத்தும் அப்படியே வீடியோவில் உள்ளன. . சற்று அவர் தாமதித்து நகராமல் இருந்திருந்தால் நாஜநாகத்தின் கொடிய விஷத்திற்கு ஆளாகி ரத்தம் உறைந்து இறந்து போய் இருப்பார்.

வீடியோ வைரல்

இந்த வீடியோவை வனவிலங்குகள் பற்றி அதிக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஐஃஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. அதில், 'பாம்பை பிடிப்பதற்கு முன் இருமுறை யோசியுங்கள். அதுவும் குறிப்பாக நாஜநாகத்தை பிடிக்கும் போது' என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் லைக் மற்றும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English summary
king cobra: Its venom is not the most potent among venomous snakes, but the amount of neurotoxin they can deliver in a single bite—up to two-tenths of a fluid ounce—is enough to kill 20 people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X