தங்கசெயினை விடு.. இல்லைனா கொன்னுடுவேன்! பெங்களூர் இந்திரா நகரில் பெண்ணை பணயக் கைதியாக பிடித்த நபர்
பெங்களூர்: பெங்களூரில் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்திரா நகர் 100 அடி ரோட்டில் கடைக்குள் திடீரென நுழைந்த நபர் 'பெவிக்விக்' பசையை பயன்படுத்தி ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றிய பெண்ணின் கைகளை ஒன்றாக ஒட்டிவைத்துவிட்டு கழுத்தில் கிடந்த தங்கசெயினை பறிக்க முயன்றார். அந்த பெண் சுதாரித்து கொண்டதால் அந்த கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்து தப்பிக்க அந்த பெண்ணை பணயக் கைதி போல் பிடித்து கழுத்தில் கத்திவைத்து மிரட்டிய சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.

பெங்களூர் இந்திரா நகரில் உள்ள 100 அடி ரோட்டில் பிரிமீயம் ஷு மற்றும் பேக் ரிப்பேர் பார்க்கும் கடை உள்ளது. இங்கு 23 வயது நிரம்பிய டொம்லூரை சேர்ந்த இளம்பெண் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் இளம்பெண் தான் பணியாற்றும் கடையில் பணியில் இருந்தார்.
அப்போது திடீரென்று ஒருவர் கூச்சலிட்டபடி வேகமாக கடைக்குள் நுழைந்தார். யாரோ அவரை கொல்ல வருவது போலவும், தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கூச்சலிட்டப்படி ஓடினார். அந்த நபர் தலையில் 'ஹெல்மெட்', கையில் 'கிளவுஸ்' அணிந்திருந்தார். மின்னல் வேகத்தில் ரிசப்ஷனிஸ்ட் மேஜையை தாண்டி உள்ளே குதித்தார்.
அங்கு ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த பெண் அவரை பார்த்து பயந்துபோனார். கடையின் உரிமையாளரை அலர்ட் செய்வதற்குள் அந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்தார். "சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டிய அந்த நபர், தான் வைத்திருந்த 'ஃபெவிக்விக்' பசையை எடுத்து டேபிளில் ஊற்றி, அந்த பெண்ணின் கைகளை அதன் மீது வைத்து அழுத்தினார்.
பிறகு அந்த பெண் அணிந்திருந்த 35 கிராம் தங்க செயினை(தாலி செயின்) பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட பெண் உடனடியாக டேபிளில் 'ஃபெவிக்விக்' பசையில் ஒட்டப்பட்டு இருந்த தனது கையை எடுத்து கொண்டு உதவிக்காக கத்தினார். அருகே இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வந்தனர். அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரும் வந்தனர்.
இனி தப்பிக்க முடியாது. மாட்டிக்கொள்வோம் என உணர்ந்த நபர் அந்த பெண்ணை பணயக் கைதியாக வைத்து தப்பிக்க முயன்றார். அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு வெளியே இழுத்து வந்தார். அவரை விடும்படி அங்கிருந்தவர்கள் கூறியும் அந்த நபர் விடவில்லை. கொலை செய்துவிடுவதாக அந்த நபர் தொடர்ந்து மிரட்டினார்.
#BengaluruA woman was held hostage at knifepoint during an attempted gold chain snatching in Indiranagar, Bengaluru. 😳The accused, identified as 40-year-old Prabhuraj, allegedly threatened to stab her if she did not hand over her chain. The incident took place in broad daylight on the busy 100 Feet Road within the limits of Indiranagar police station. The women escaped safely. 🙏🏻
— Mahua Moitra Fans (@MahuaMoitraFans) November 3, 2026
ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் அந்த நபரின் கையை பிடித்து இழுத்து இளம்பெண்ணை மீட்டனர். அதன்பிறகு அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் அந்த நபரின் கையை பிடித்து இழுத்து இளம்பெண்ணை மீட்டனர். அதன்பிறகு அவரை இந்திரா நகர் போலீசில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் சார்பில் இந்திரா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிக்கிய நபரின் பெயர் பிரபுராஜ் என்ற ராஜ் (வயது 40) என்பது தெரியவந்தது. கடையில் அந்த பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு பிரபுராஜ் அவரிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதற்காக தன்னை யாரோ ஒருவர் கொல்ல வருவது போல் கத்திக்கொண்டு கடைக்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது. கைதான பிரபுராஜை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தான் கடையில் இருந்து அந்த பெண்ணை கத்தி முனையில் பணயக் கைதியாக்கி பிரபுராஜ் தப்பிக்க முயன்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.





Click it and Unblock the Notifications
